அமைச்சராகும் கமல்ஹாசன்.. பிக் பாஸை வைத்து ஸ்டாலின் போடும் பிக் பிளான்.. அட அப்போ கோவை இல்லையா?
சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் கோயம்புத்தூரில் போட்டியிடுவேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அதன்படி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் ஆலோசித்த மநீம தலைவர் கமல்ஹாசன் லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ளதாக உறுதி செய்திருக்கிறார்.
அவர் பேசுகிற இடங்களில் எல்லாம் லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக முடிந்த அளவு பதிவு செய்து கொண்டே இருக்கிறார். மேலும், கூட்டணிக்கு அழைப்பிதழ் ரெடியாகிவிட்டது என்றும் கூறி உள்ளார். நாடு முழுக்க லோக்சபா தேர்தலுக்காக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது.

இன்னொரு பக்கம் காங்கிரஸ் - திமுக ஆகியவை சேர்ந்து பிரம்மாண்டமாக இந்தியா என்ற கூட்டணியை தேசிய அளவில் உருவாக்கி உள்ளது. இந்த கூட்டணிக்கான ஆதரவு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கிட்டத்தட்ட 26 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்று உள்ளன. இந்த இந்திய கூட்டணியில் இணைந்து திமுக தலைமையின் கீழ் தமிழ்நாட்டில் மக்கள் நீதி மய்யம் லோக்சபா தேர்தலை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன.
கடந்த சில நாட்களாக வரக்கூடிய கருத்து கணிப்பு செய்திகளும் கூட இந்த இந்திய கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாகவே வந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் 5-10 தொகுதிகளில் பாஜக இந்த முறை லோக்சபா தேர்தலில் போட்டியிடும் என்று கூறப்படுகிறது.
கோவையில் போட்டி: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் கோயம்புத்தூரில் போட்டியிடுவேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அதன்படி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுடன் ஆலோசித்த மநீம தலைவர் கமல்ஹாசன், கோவையில் போட்டியிட உள்ளதாக உறுதி செய்திருக்கிறார். மேலும், கூட்டணிக்கு அழைப்பிதழ் ரெடியாகிவிட்டது என்றும் கூறி உள்ளார்.
அவர் கோவையில் போட்டியிடும் பட்சத்தில் ஏற்கனவே கோவையில் போட்டியிட திட்டமிட்டுள்ள அண்ணாமலை கமல்ஹாசன் இடையே கோவையில் பலத்த போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் ஆ. ராசா - எல் முருகன் இடையே போட்டி நிலவும் பட்சத்தில் இங்கே அண்ணாமலை கமல்ஹாசன் இடையே கோவையில் பலத்த போட்டி நிலவும் வாய்ப்புகள் உள்ளன என்றும் கூறப்படுகிறது.
வேறு தொகுதியா? : பாரி வேந்தர் தொகுதியில் போட்டியிட்ட பெரம்பலூர் தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட எம்பி பாரிவேந்தர் கடந்த சில நாட்களாக திமுகவை நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கி பேசி வந்தார். அதோடு இவர் பாஜகவுடன் நெருக்கமும் காட்டி வந்தார். தமிழ்நாட்டில் திமுக 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 38ல் வென்றது.
இதில் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட இந்திய ஜனநாயக கட்சி எம்பி பாரிவேந்தர் கூட பாஜகவுடன் நெருக்கம் காட்டி வந்தார். இவர் என்னதான் ஐஜேகே கட்சியாக இருந்தாலும் நாடாளுமன்றத்தில் இவர் திமுக எம்பிதான். சமீபத்தில் இவர் பிரதமர் மோடியை நேரடியாக பாராட்டினார். அதோடு திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.
இந்த நிலையில்தான் கோவையில் மீண்டும் போட்டியிட சிபிஎம் விரும்பும் பட்சத்தில்.. பெரம்பலூர் தொகுதியில் கமல்ஹாசன் இறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதோடு இல்லாமல்.. கமல்ஹாசன் இங்கே வெற்றிபெறும் பட்சத்தில் அவருக்கு, இந்தியா கூட்டணியும் ஆட்சி அமைக்கும் பட்சத்தில் மத்திய அமைச்சர் பதவியை கொடுக்க காங்கிரசுக்கு திமுக பிரஷர் கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளன.
-
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
ரூ.500 நோட்டு ரத்தாகிறதா! தமிழக ஏடிஎம்களில் வெறும் 100 ரூபாய் மட்டும் வருதே? பின்னணி அரசியல் ரகசியம் -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications