கேமரா மேனுக்காக காத்திருந்தாரா மோடி? தாயை சந்தித்தபோது நடந்த சம்பவம் -வீடியோவை நீங்களே பாருங்க
அகமதாபாத்: 100 வது பிறந்தநாளை கொண்டாடிய தனது தாயை சந்திக்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி, கேமராமேன் வரும்வரை காரிலேயே காத்திருந்ததாக வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபாய் மோடி அம்மையார் குஜராத் மாநிலம் காந்திநகரில் வசித்து வருகிறார்.
பிரதமராக பதவியேற்ற 8 ஆண்டுகளில் அடிக்கடி குஜராத்துக்கு பயணம் செய்யும் பிரதமர் மோடி தனது தாயாரை சந்திப்பது வழக்கம்.

ஹீராபாய் மோடி
குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது பிறந்தநாளன்றும், தனது தாயின் பிறந்தநாளன்றும், தேர்தல் சமயங்களிலும், தேர்தலில் வென்ற பிறகும் தனது தாயை தவறாமல் சந்தித்து ஆசி பெறுவார். பிரதமர் நரேந்திர மோடி தனது தாயிடம் ஆசிபெற்று அவருடன் பேசும் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாவதும் வழக்கம்.

100 வது பிறந்தநாள்
அந்த வகையில் இன்று பிரதமரின் தாய் ஹீராபாய் மோடி தனது 100 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை கொண்டாடுவதற்காக , குஜராத் மாநிலம் காந்தி நகரில் உள்ள தனது தாயின் வீட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். அங்கு தனது தாயாரை சந்தித்து நலம் விசாரித்த மோடி, அவருக்கு இனிப்பு ஊட்டினார்.

பாதபூஜை
தாயுடன் சேர்ந்து சிறப்பு வழிபாடு செய்த அவர், தாயின் காலை கழுவி அந்த நீரை கண்ணில் தொட்டு பாத பூஜை செய்தார். மோடியின் தாய் நீண்ட ஆயுளுடனும் நல்ல உடல் நலத்துடனும் வாழ பல கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. குறிப்பாக வாட்நகரில் உள்ள பிரபலமான ஹட்கேஷ்வர் கோவிலில் சிறப்புப் பூஜைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கேமராமேனுக்காக வெயிட்டிங்கா?
இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ. வெளியிட்ட வீடியோ தற்போது அதிகளவில் டிரெண்டாகி வருகிறது. அதில், காந்திநகரில் உள்ள தனது தாயின் இல்லத்துக்கு சென்ற பிரதமர் மோடி, கார் நின்ற பிறகும் உள்ளேயே அமர்ந்திருக்கிறார். சிறிது நேரம் கழித்து கேமராமேன் அங்கு வந்தவுடனே மோடி காரிலிருந்து இறங்குகிறார். இதனை பலரும் பகிர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
#WATCH | Gujarat: Prime Minister Narendra Modi reaches the residence of his mother Heeraben Modi, in Gandhinagar.
— ANI (@ANI) June 18, 2022
PM Modi's mother will enter the 100th year of her life today. pic.twitter.com/sCVXA9RsSo
-
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு












Click it and Unblock the Notifications