நாளுக்கு நாள் நலிவடைந்து வரும் பேராசிரியர் அன்பழகன்.. தொடர் மருத்துவ கண்காணிப்பு
Recommended Video
சென்னை: திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நிலை நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறதாம். அவர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனுக்கு வயது 97. உலகிலேயே இந்த வயதில் ஒரு கட்சியின் பொதுச்செயலாளராக யாரும் இருந்ததில்லை.

அரைநூற்றாண்டு காலத்திற்கும் மேலாக தமிழக அரசியலில் தடம் பதித்து வருபவர் இவர். தள்ளாத வயதிலும் தளர்வின்றி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை கட்சிப்பணி ஆற்றி வந்த பேராசியர் அன்பழகன் இன்று படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை மருத்துவர்கள் குழுவினர் தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளனர். அவரது மருமகனே மருத்துவர் என்பதால் அவர் தலைமையில் அன்பழகனுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
கீழ்பாக்கம் கார்டனில் உள்ள வீட்டில் அன்பழகன் இருக்கிறார். உணவு உண்ண முடியாததால் மூக்கின் வழியாக டியூப் போட்டு திரவ நிலையில் உணவு தரப்படுகிறதாம். கடந்த சில நாட்களாக அவ்வப்போது நினைவும் தப்பிவிடுகிறதாம்.
மேலும், பேசமுடியாத நிலையில் தன்னை பார்ப்பவர்களை அடையாளம் காணவே அவர் ரொம்ப சிரமப்படுகிறாராம். கம்பீர தோற்றத்தில் கழுத்தில் சால்வையுடன் வலம் வந்தவர், இன்று வயது மூப்பின் காரணமாக நோயுற்று அவதியுறுவதை கண்டு கவலையடைந்துள்ளனர் திமுகவில் உள்ள அவரது அனுதாபிகள்.
-
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications