மழைக்காலத்தில் திருமணமா? இந்த நகைகளை அணியுங்கள்.. கலெக்சன்களை வழங்கும் கல்யாண் ஜூவல்லர்ஸ்!

மழை காலத்தில் நடக்கும் திருமணங்களுக்காக பிரத்யோகமாக தயார் செய்யப்பட்ட நகைகளை கல்யாண் ஜூவல்லர்ஸ் விற்பனை செய்கிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மழை காலத்தில் நடக்கும் திருமணங்களுக்காக பிரத்யோகமாக தயார் செய்யப்பட்ட நகைகளை கல்யாண் ஜூவல்லர்ஸ் விற்பனை செய்கிறது. பல மாடல்களில் மழைக்கால திருமணத்திற்கு ஏற்றபடி இந்த நகைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

மழை காலம்.. இரண்டு உறவுகள் இணைவதற்கு இதைவிட வேறு கவித்துவமான காலம் இருந்துவிட முடியுமா. மேகங்கள் சூழ, வானத்தில் இருந்து சிறு சிறுதுளிகள் சாரல் மழையாக பொழிய காதல் கொண்ட இரு மனங்கள் கரம் கோர்ப்பது என்பதுதான் காவிய திருமணம். இதனால்தான் என்னவோ சமீப நாட்களில் மழை காலத்தில் நடக்கும் திருமணங்கள் அதிகரித்து வருகிறது.

அதிலும் கரு மேகம் சூழ, காற்று அடிக்க அழகான வானிலையில் நடக்கும் திருமணங்கள் சிலருக்கு கனவு போலவே மாறி விடுகிறது. கவித்துமான ஒரு திருமணம் செய்ய வேண்டும் என்றால் நீங்கள் கண்டிப்பாக மழைக்காலத்தில்தான் திருமணம் செய்ய வேண்டும்.

நீங்களே நினைத்து பாருங்கள்.. ஒரு மழைக்கால மாலையில், அழகான வானிலையில் உங்கள் திருமணமோ, வரவேற்போ நடந்தால் எவ்வளவு அழகாக இருக்கும். கேட்கவே ரொமான்டிக்காக இருக்கிறது அல்லவா?

இந்த மாதிரி சூழ்நிலையில் செய்யப்படும் திருமணங்களில் மென் பட்டு , உயர்ந்த ரக பட்டுகளை ஆடைகளாக உடுத்த வேண்டும். அதிக கனமான உடைகளை உடுத்தி நீங்கள் இந்த திருமணங்களில் கலந்து கொண்டால், உங்களுக்கு வியர்வை எடுத்து அந்த நாளே மோசமாகும். சில்க், வெல்வெட் உடைகளை இதுபோன்ற சமயங்களில் நீங்கள் தவிர்க்க வேண்டும்.

ஆகவே நீங்கள் மெல்லிய, லைட்டான ஆடைகளை உடுத்துவதால் நீங்கள் போட்டு இருக்கும் நகைகள் நல்ல எடுப்பாக தெரியும். மழை கால திருமணங்களில் உடுத்துவதற்காக நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய நகைகளின் கலெக்சன் இதோ!

உயரிய கற்கள் மூலம் அசத்திடுங்கள்:

உங்கள் நகைகளில் இருக்கும் மிளிரும் கற்கள்தான் மழைக்காலத்தில் நீங்கள் நகை அணியும் போது வெளியே பளீர் என்று தெரியும். நீங்கள் லைட்டான நிறத்தில் உடை அணிவதால் மழை காலத்தில் நகைகள்தான் உங்கள் அழகை எடுத்துக்காட்டும். அதனால்தான் மழை காலத்தில் நடக்கும் திருமணங்களுக்கு நீங்கள் நிறைய கல் வைத்த நகைகளை அணிய உடையும்.

ஆகவே நீங்கள் மழை காலத்தில் திருமணத்திற்கு நகை எடுக்கும் போது நல்ல பொலிவு தரக்கூடிய வண்ணங்களை எடுக்க வேண்டும். ஆகவே நீங்கள் நல்ல பொலிவான ஜெம்ஸ் கற்கள் உள்ள நகைகளை எடுக்கலாம். ஆக்சிடைஸ் செய்த சில்வர் மற்றும் பிளாட்டினம் பீஸ்களை விட பொலிவான கற்களே இந்த சூழ்நிலைக்கு சிறந்தது.

இந்த கற்கள் உங்கள் லுக்கை கூடுதல் அழகாக மாற்றி உங்களை இன்னும் மிளிர செய்யும்.

பாரம்பரியமும் மிளிரும் தங்கமும்:

அதேபோல் தங்க நகைகள், அதிலும் பாரம்பரியமான நகைகளும் பெரும்பாலும் மணப்பெண்களால் விரும்பப்படும். இதுவும் மழை காலங்களில் உங்கள் அழகை அதிக மேம்படுத்தும். அதேபோல் நீங்கள் தங்க வளையல்களும், வலுவான முத்துக்கள் கொண்டு நெக்பீஸ்களும் அணியும் போது உங்கள் தோற்றம் அப்படியே மாறிப்போகும்.

தி குந்தன் போல்கி செட் மற்றும் மீனாகாரி வொர்க் இரண்டும் மழைக்கால திருமணங்களில் மிக சிறந்த தங்க நகை தேர்வாக இருக்கும்.

மயிலை போல அழகாக மாறிடுங்கள்:

மழை காலத்தில் நீங்கள் நிறைய தீம் அடிப்படையாக கொண்டு நகைகளை அணியலாம். மழை காலத்தை வாழ்த்துவது போல அழகாக நகைகளை நீங்கள் அணியலாம். அப்படி நினைக்கும் போதே கண்டிப்பாக உங்களுக்கு மயில் நினைவிற்கு வரலாம். ஆம் இப்போது மயில் தீம் நகைகளும் டிரெண்டில்தான் இருக்கிறது.

மழை காலத்தில் மயில்கள் தங்கள் தொகையை விரிப்பது போல, உங்கள் திருமணத்தில் இந்த மயில் தொகையை அடிப்படையாக கொண்டு நகைகள் அழகை கொடுக்கும். மயில் தொகையை அடிப்படையாக கொண்டு நகைகள் உங்களை அழகாக மட்டும் காட்டுவது இல்லாமல், உங்களை தனித்துவமானவராகவும் காட்டும்!

தற்போது மார்க்கெட்டில் நிறைய மயில் மாடல் நகைகள் இருக்கிறது. அதிலும் கல்யாண் ஜுவல்லர்ஸில் நிறைய வகையில் மயில் மாடல் நகைகள் கிடைக்கிறது.

தெளிவான பூக்களை இருளான வானிலையில் சூடிடுங்கள்:

இருளான மழை காலத்தில்தான் நல்ல பொலிவான பூக்கள் மலர்ந்திடும். இந்த வானிலையில்தான் மரகத கற்கள் போல மலர்கள் மின்னிடும். அதேபோல்தான் பூக்கள் டிசைன் கொண்ட நகைகள் உங்கள் அழகை இன்னும் அதிகமாக்கிடும். அதேபோல் திருமணத்தில் ரிஸ்க் எடுக்காமல் போட்டுக்கொள்ள பாதுகாப்பான தேர்வு பூக்கள் டிசைன் கொண்ட நகைகளாகத்தான் இருக்கும்.

கடந்த சில வருடங்களில் மலர்களின் டிசைன் உள்ள நகைகளில் சோதனை முயற்சியாக நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. நீங்கள் இதனால் மலர்கள் கொண்ட, தாமரை பூக்கள் கொண்ட நகைகளை தேர்வு செய்யலாம்.

உங்கள் மழைக்கால திருமணம் இன்னும் சில நாட்களில் வர போகிறது.. உங்களுக்காக மழைக்கால நகைகளை நாங்கள் தயாராக வைத்து இருக்கிறோம்.. இப்போதே வாங்கிடுங்கள்.. உங்கள் திருமணத்திற்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+