கொடுமை.. காதலித்து கர்ப்பமாக்கி.. காப்பு காட்டில் பிரசவமும் பார்த்து.. அதுவும் யூடியூப் பார்த்து!

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: மிகப்பெரிய கொடூரம் ஒன்று தமிழகத்தில் நடந்துள்ளது.. இளைஞர் ஒருவர் பெண்ணை காதலித்து.. கர்ப்பமாக்கி... 9வது மாதத்தில் யூட்யூப் பார்த்து காட்டு பகுதியில் வைத்து அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்துள்ளார்.. !இந்த செய்தியை கேட்டு தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் சவுந்தர்.. காலேஜில் 2-ம் வருடம் படிக்கிறார்.. 19 வயசுதான் ஆகிறது.. இவருக்கு ஒரு காதலி.. அவரும் மாணவிதான்.. அதே பகுதியில் வசித்து வருபவர்!

நெருங்கி பழகியதில் அந்த பெண் கர்ப்பமானார்.. வீட்டுக்கு விஷயம் தெரியாது.. 9 மாதம் ஆனநிலையில்தான் இருவரும் பயந்துவிட்டனர்.. இதனால் வெளியில் இது தெரியாமல் இருக்க 9 மாத கர்ப்பிணிக்கு தானே பிரசவம் பார்க்க முடிவு செய்தார் சவுந்தர்.

பிரசவம்

பிரசவம்

அதனால் பக்கத்தில் இருந்த காப்புக்காட்டுக்கு காதலியை அழைத்து வந்தார்... செல்போனில் யூ-டியூப் வீடியோவை பார்த்து எப்படி பிரசவம் பார்ப்பது என்பதையும் கற்று கொண்டார்.. அந்த வீடியோவை பார்த்து பார்த்தே பெண்ணுக்கு ஆப்ரேஷன் செய்து அந்த சிசுவை வெளியே எடுக்க முயன்றுள்ளார்.. அப்போது குழந்தையின் கை பகுதி மட்டும் தனியாக முதலில் வந்திருக்கிறது.... அந்த கையை பிடித்து சவுந்தர் இழுத்துள்ளதாக தெரிகிறது..

சவுந்தர்

சவுந்தர்

ஏடாகூடமாக பிரசவம் பார்த்ததில் இளம்பெண்ணிற்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது... ரத்தம் இப்படி கொட்டியதை பார்த்ததும் சவுந்தர் பயந்துவிட்டார்.. அதன்பிறகுதான் தன் அம்மாவுக்கு போன் செய்து சொல்லவும், 108 ஆம்புலன்சில் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்குள் நுழைந்ததுமே அங்கிருந்தோர் அதிர்ச்சி அடைந்தனர்.

ரத்த போக்கு

ரத்த போக்கு

இளம்பெண்ணுக்கு எதனால் ரத்த போக்கு ஏற்பட்டது என்று சவுந்தர் சொன்னதுமே டாக்டர்கள் உறைந்து போய் நின்றனர்... உடனடியாக அப்பெண்ணிற்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஆர்எஸ்எம் ஆஸபத்திரியில் அனுமதித்துள்ளனர்.. அந்த பெண் இப்போது சீரியஸாக உள்ளார்.. தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது.

விசாரணை

விசாரணை

ஆபரேஷன் செய்து குழந்தை வெளியே எடுக்கப்பட்டது.. அது ஒரு ஆண் குழந்தை.. ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டது.. சவுந்தரை கும்மிடிப்பூண்டி போலீசார் கைது செய்துள்ளனர். தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.. கள்ளக்காதலை மறைப்பதற்காக 19 வயது இளைஞர், மாணவிக்கு காப்புக் காட்டில் பிரசவம் பார்த்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+