காஞ்சியில் பரபரப்பு.. அத்தி வரதர் தரிசனத்தின்போது மின்சாரம் பாய்ந்தது.. 20 பேர் காயம்

அத்திவரதர் தரிசனத்தின்போது மின்சாரம் தாக்கி 20 பக்தர்கள் காயமடைந்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்தில் மின்சாரம் தாக்கி பக்தர்கள் 20 பேர் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த 5 பேர் ஆஸ்பத்திரியில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த 1-ம் தேதி முதல் அத்திவரதர் முதலில் படுத்த கோலத்திலும், தற்போது நின்ற கோலத்திலும் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அன்று முதல் இன்று வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்கள் விடிகாலையிலேயே குவிந்து விடுகின்றனர்.

20 devotees injured by electricity hit in Athi Varadar darshan

பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தாலும், மேலும் வசதிகள் செய்துதர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது.

ஒவ்வொரு நாளும், கூட்ட நெரிசலில் முண்டியடித்து கொண்டு, அத்திவரதரை தரிசிப்பதால், பக்தர்கள் சிலர் மயக்கம் உள்ளிட்ட தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டனர்... ஏன் உயிர்பலியும் ஏற்பட்டுள்ளது.

இன்றும் அத்திவரதரை சந்திக்க கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதில், முக்கிய பிரமுகர்கள் வரிசையில் மின்சாரம் தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. மின்சாரம் பாய்ந்ததில் 20 பக்தர்கள் காயமடைந்தனர். இதில் அதிகமான பாதிப்பு ஏற்பட்ட 5 பேர் உடனடியாக முகாமிலேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சைக்கு பின்னர் 5 பேரும் மீண்டும் தரிசனத்தில் பங்கேற்றனர். காயமடைந்தவர்களில் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினரும் அடங்குவர் என்று சொல்லப்படுகிறது. தரிசனம் செய்ய கால்நடுக்க நின்றும், பக்தர்களை மின்சாரம் தாக்கியதால், ஒருவித பரபரப்பு சூழல் அங்கு சிறிது நேரம் நிலவிளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+