அத்திவரதர் கோவிலில் நள்ளிரவில் சிறப்பு தரிசனம் செய்த ரஜினிகாந்த்.. ஸ்பெஷல் பூஜை!
காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு தரிசனம் செய்தார்.
Recommended Video
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு தரிசனம் செய்தார். அவரின் மனைவி லதா ரஜினிகாந்தும் உடன் இருந்தார்.
காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அத்திவரதர் தரிசனம் இன்னும் இரண்டு நாட்களில் நிறுத்தப்பட உள்ளது. அத்திவரதர் கோவில் தற்போது இந்தியா முழுக்க பிரபலம்.
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இவர் எழுந்தருளுவார் என்பதால், நாடு முழுக்க தற்போது பிரபலமாகி உள்ளது இந்த கோவில். இவரை தரிசிக்க பல பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் தினமும் பக்தர்கள் வருகிறார்கள்.

பிரபலங்கள் வருவார்கள்
தமிழகத்தில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் இங்கு குவிந்து வருகிறார்கள். பல மாநிலங்களில் இருந்து இவரை தரிசனம் செய்ய மக்கள் கூட்டம் கூட்டமாக காஞ்சிபுரத்தை நோக்கி படை எடுத்து வருகிறார்கள். அதேபோல் முக்கிய அரசியல் தலைவர்கள், கட்சியினர், பிரபலங்கள் கூட இங்கு வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.

மூடுகிறார்கள்
கடந்த ஜூலை 1-ம் தேதி குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை மீண்டும் குளத்தில் வைக்கப்பட உள்ளது . 48-வது நாளான ஆகஸ்ட் 17-ல் அத்திவரதர் சிலை மீண்டும் குளத்தில் வைக்கப்பட உள்ளது. இதனால் 16-ம் தேதி வரை மட்டுமே பக்தர் தரிசனத்துக்கு வைக்கப்படும்.

ரஜினி தரிசனம்
இதையடுத்து காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு தரிசனம் செய்தார். அவரின் மனைவி லதா ரஜினிகாந்தும் உடன் இருந்தார். நள்ளிரவில் மக்கள் கூட்டம் அதிகமாக இல்லாத நேரத்தில் நடிகர் ரஜினிகாந்த இந்த கோவிலில் தரிசனம் செய்தார்.

என்ன பூஜை
ரஜினியும், லதா ரஜினிகாந்தும் சேர்ந்து சிறப்பு பூஜை செய்தனர். நேற்று இரவு சுமார் 20 நிமிடம் அவர் கோவிலில் தரிசனம் நடத்தினார். அதே நேரத்தில் கோவில் தரிசனம் செய்ய காத்திருந்த சில மக்கள் ரஜினியை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications