தமிழ்நாட்டுக்கு ஒரு பங்கம் என்றால்.. பிரதமரை தொடவும் தயங்கமாட்டோம்! அதிமுக இளைஞர் பாசறை பாய்ச்சல்!
அண்ணாமலைக்கு அதிமுக இளைஞர் பாசறை பதிலடி.
காஞ்சிபுரம்: தமிழ்நாட்டு உரிமைகளுக்கு ஒரு பங்கம் என்றால் பிரதமரை தொட்டுப் பார்க்கவும் தயங்கமாட்டோம் என அக்கட்சியின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநிலச் செயலாளர் பரமசிவம் பாய்ச்சல் காட்டியுள்ளார்.
ஒரே ஓட்டில் வாஜ்பாயை வீட்டுக்கு அனுப்பிய கட்சி அதிமுக என்பதை பாஜகவினர் மறந்துவிடக் கூடாது எனக் கூறியுள்ளார்.
அதிமுகவுக்கு என்று ஒரு நியூட்டனின் விதி இருப்பதாகவும் ஒன்றுக்கு மூன்றாக திருப்பிக் கொடுப்பது தான் அதிமுகவின் நியூட்டன் விதி எனவும் பரமசிவம் தெரிவித்தார்.

அதிமுக -பாஜக
'ஒன்றுக்கு ஒன்றாக முத்துக்கு முத்தாக' என்ற பாடல் வரிகளுக்கேற்ப அதிமுகவும், பாஜகவும் ஒற்றுமையாக இருந்த காலம் மலையேறி போய்விட்ட நிலையில், இன்று அடிதடி நடக்கும் அளவுக்கு இரண்டு கட்சிகளும் பிய்த்துக் கொண்டு நிற்கின்றன. பாஜக முக்கிய நிர்வாகிகள் வரிசையாக அதிமுகவில் இணைந்து வருவது குறித்து கூறிய அண்ணாமலை, ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஒன்றுக்கு 3ஆக திருப்பிக் கொடுப்போம்
இதனிடையே அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாநிலச் செயலாளர் பரமசிவம், அதிமுகவுக்கு என்று ஒரு நியூட்டனின் விதி இருப்பதாகவும் ஒன்றுக்கு மூன்றாக திருப்பிக் கொடுப்பது தான் அதிமுகவின் நியூட்டன் விதி எனவும் ஒரே ஓட்டில் வாஜ்பாயை வீட்டுக்கு அனுப்பிய கட்சி அதிமுக என்பதை பாஜகவினர் மறந்துவிடக் கூடாது எனவும் பாய்ந்துள்ளார்.

தடிமணாக பேசாதீர்
அண்ணாமலை வார்த்தைகளை தடிமணாக விடக்கூடாது என்றும் தமிழகத்தின் உரிமைகளுக்கு பிரச்சனை ஏற்படுமானால் பிரதமரை தொட்டுப் பார்க்கவும் தயங்காத கட்சி அதிமுக என்பது கடந்தகால வரலாறு எனவும் பேசினார். எடப்பாடி பழனிசாமியின் ஆளுமையை அறிந்து இளைய சமுதாயத்தினர் அதிமுகவில் இணைய ஆர்வம் காட்டி படையெடுத்து வருகிறார்கள் என்றும் பாஜகவினரை ஏதோ நாங்கள் வலை வீசி பிடித்து வந்ததை போல் பேசுவதை அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கூறியிருக்கிறார்.

வார்த்தைப் போர்
அதிமுக -பாஜக இடையேயான வார்த்தைப் போர் முற்றுவதை பார்த்தால் 2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணியில் மிகப்பெரிய மாற்றங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications