நிர்மலா பங்கேற்கும் நிகழ்வு.. காஞ்சிபுரம் கோவிலில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட எல்இடி அகற்றம்.. பின்னணி
காஞ்சிபுரம்: காமாட்சியம்மன் கோயிலில் எல்.இ.டி. திரை அகற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காமாட்சியம்மன் கோயிலில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த எல்.இ.டி. திரை அகற்றப்பட்டது
அயோத்தி கோயில் திறப்பு விழாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுமக்களுடன் அமர்ந்து காணும் வகையில் பொருத்தப்பட்ட எல்.இ.டி. திரை அகற்றப்பட்டு உள்ளது. கோவிலில் அனுமதி இன்றி இந்த திரை வைக்கப்பட்டு இருக்கிறது.

கோவில் திறப்பு விழா: அயோத்தி ராமர் கோவில் விழா இன்று அயோத்தியில் விமர்சையாக நடக்கிறது. அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை இன்று பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற உள்ளது. இந்த நிலையில்தான் நேற்று தமிழ்நாட்டில் ராமர் கோவில்களில் பூஜை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டதாக பொய்யான செய்திகள் பரவின.
நிர்மலா சீதாராமன்: கோவிலில் சிறப்பு பூஜைகளை நடத்த விடாமல் அரசு தடுப்பதாக பாஜக விமர்சனம் வைத்தது. அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்த புகாரில், 22 ஜனவரி அன்று நடைபெறும் அயோத்தி ராமர் மந்திர் நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் ஸ்ரீராமருக்கு 200க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. HR&CE நிர்வகிக்கப்படும் கோவில்களில் ஸ்ரீ ராமரின் பெயரில் பூஜை/பஜனை/பிரசாதம்/அன்னதானம் அனுமதிக்கப்படுவதில்லை.
தனியாருக்கு சொந்தமான கோவில்களில் நிகழ்ச்சிகளை நடத்துவதையும் போலீசார் தடுத்து வருகின்றனர். பந்தல்களை கிழித்து விடுவோம் என அமைப்பாளர்களை மிரட்டுகின்றனர். இந்த இந்து விரோத, வெறுக்கத்தக்க செயலை வன்மையாக கண்டிக்கிறேன், என்று கூறியுள்ளார்.
சேகர் பாபு: தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில், நாளை ராமர் பெயரில் பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என பரப்பப்படும் வதந்திக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு மறுப்பு வெளியிட்டார். அதில் ஒன்றிய அமைச்சர் என்ன கடவுளா? என்ன ஆதாரத்துடன் இத்தகைய தகவலை பரப்புகிறார்
அதில், சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும், திமுக இளைஞரணி மாநாட்டை திசைதிருப்புவதற்காக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ராமர் பெயரில் பூசை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை.
முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள ஒன்றிய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது!, என்று கூறி இருந்தார். இந்த விவகாரம் நேற்று நாள் முழுக்க தேசிய அளவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
அமைச்சர் நிர்மலா புகார்: இந்த நிலையில், அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர் புகார்களை வைத்துள்ளார். அதில், தமிழகத்தில் அடக்குமுறை தொடர்கிறது . திமுக அரசு குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டது; எல்இடி திரை வியாபாரிகளின் வயிற்றிலேயே அடிக்கிறது; இந்து விரோத திமுக அரசு தற்போது பிரதமர் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகிறது.
இந்துக்களின் வழிபாட்டு முறையில், மாற்றி மாற்றி, இடையூறுகளை ஏற்படுத்துவதை TN முழுவதிலிருந்தும் வரும் செய்திகளுக்கு முற்றப்புள்ளி வைக்கவேண்டிய கடமை உங்களுடையது. மேலும், சின்ன சின்ன தனியார் கோவிலில் நடக்கும் ஏற்பாடுகளிலும், காவல்துறையினர் அங்கேயிருந்து அநாவசிய தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர். ஆதலால், அமைச்சர் அவர்களே, இந்துக்களின் அடிப்படை உரிமைகளை காக்கும் ரீதியில், அறநிலைய துறை அமைச்சராக நீங்கள் முன்நின்று காப்பற்ற வேண்டும். தடையில்லையேல், உங்கள் அதிகாரிகளை, உடனே தடங்கல் செய்வதை நிறுத்தி, பக்தர்களுக்கு ஒத்துழைக்குமாறு ஆணையிடுங்கள், என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் புகார் வைத்துள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications