அடடே.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. கடன் வேற வாங்கியிருக்கிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொத்து மதிப்பு கடந்த பொதுத் தேர்தலுடன் ஒப்பிடும்போது 1 கோடி வரை குறைந்துள்ளதாக வேட்பு மனு தாக்கலின்போது அவர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    சேலம்: எடப்பாடி பழனிசாமியின் சொத்து மதிப்பு.. குறைய இதுதான் காரணம்!

    வேட்புமனு தாக்கலின்போது ஒவ்வொரு வேட்பாளரும் தங்களது சொத்து மற்றும் கடன் மதிப்பு உள்ளிட்டவற்றை குறிப்பிடுவது அவசியம்.

    அந்த வகையில் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் எடப்பாடி பழனிசாமி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்து இருந்தார். அதில், முதல்வரின் சொத்து மதிப்பு ஒரு கோடி ரூபாய் வரை குறைந்துள்ளது தெரியவருகிறது.

    சொத்து மதிப்பு குறைந்துள்ளது

    சொத்து மதிப்பு குறைந்துள்ளது

    2016 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் நடந்தது அல்லவா.. அப்போது எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனக்கு மூன்று கோடியே 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார். இன்று அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் எடப்பாடி பழனிச்சாமியின் சொத்து மதிப்பு 2.1 கோடியாக உள்ளது.

    அசையா சொத்து மதிப்பு

    அசையா சொத்து மதிப்பு

    அதாவது சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் அவரது சொத்து மதிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமியின் அசையா சொத்து மதிப்பு 4.66 கோடி இப்போது அது 4.68 கோடி என்ற அளவில் உள்ளது.

    முதல்வருக்கு கடன்

    முதல்வருக்கு கடன்

    2016-ஆம் ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இருந்த கடன் 33 லட்சம். இப்போது பரவாயில்லை ஓரளவு கடனை திருப்பி செலுத்தி விட்டார் போலும். இப்போது அவரது கடன் அளவு 29 லட்சத்து 75,000 என்ற அளவுக்கு இருக்கிறது.

    சொத்து மதிப்புகள்

    சொத்து மதிப்புகள்

    வேட்புமனு தாக்கல் செய்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட ஒவ்வொரு தலைவர்களின் சொத்து மற்றும் கடன் மதிப்பு தேர்தல் ஆணையத்திடமிருந்து, ஊடகங்கள் வாயிலாக மாலையில் வெளியாகிக் கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+