நடு ராத்திரியில்.. தூங்கிய மனைவியை உற்று பார்த்த கணவர்.. அலறி அடித்துக் கொண்டு.. கொடுமை!
காஞ்சிபுரம் அருகே தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்
காஞ்சிபுரம்: தூங்கி கொண்டிருந்த கணவன், திடீரென எழுந்து மனைவியை பார்த்தார்.. பிறகு அலறி அடித்து கொண்டு ஓடிப்போய் தற்கொலையே செய்து கொண்டார்!
Recommended Video

காஞ்சிபுரம் அருகே விநாயகபுரம் குப்பம்மாள் என்ற நகர் உள்ளது.. இங்கு வசித்து வருபவர் கதிர்வேல்.. இவர் அதே பகுதியில் டைல்ஸ் கடையை சொந்தமாக நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மணிமேகலை.

இவர்களுக்கு 8 வயதில் முத்து அட்சயா என்ற 8 வயது மகளும், நிவாசினி என்ற 4 வயது மகளும் உள்ளனர். இந்நிலையில் தம்பதிக்குள் அடிக்கடி சண்டை வரும் என்று கூறப்படுகிறது.
இதற்கு காரணம் கணவன் மீது மனைவிக்கு உள்ள தீர்க்கமான சந்தேகம்தான்.. இது தொடர்பாக எல்லை மீறிய தகராறுகள் இவர்களுக்குள் வந்துபோயுள்ளது. அப்படித்தான் நேற்றும் வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது.. பிறகு, கதிர்வேல், குழந்தைகள் அனைவரும் தூங்க போய்விட்டனர்.. அந்த நேரம் பார்த்து அழுதுகொண்டே இருந்த மணிமேகலை, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிறகு தூங்கி கொண்டிருந்த கதிர்வேலு நடுராத்திரி திடீரென எழுந்து பார்த்தால், மணிமேகலை பிணமாக கிடந்தார்.. இதனால் நடுநடுங்கி போன கதிர்வேலும் அப்போதே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. இது தெரியாமல், காலையில் 2 குழந்தைகளும் எழுந்து பார்த்தபோது, அம்மா, அப்பா இருவருமே தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அலறினர்.
அந்த சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, பிறகு பாலுசெட்டி சத்திரம் போலீசாருக்கு விஷயத்தை சொன்னார்கள்.. போலீசாரும், சம்பவ இடத்துக்கு வந்து 2 உடல்களையும் கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். "சந்தேக நோய்" குடும்பத்தில் நுழைந்து இளம் தம்பதியினரையே காவு வாங்கிவிட்ட நிலையில், அந்த 2 குழந்தைகளும் தாய், தகப்பன் இன்றி கதறி அழுது கொண்டுள்ளனர்.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications