ஆஞ்சநேயர் கோயிலை இடிக்கிறாங்க.. யாராவது காப்பாற்றுங்களேன்.. கதறி அழும் காஞ்சி பக்தர்கள்
ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்பத்தூர் வருகே வரதராஜபுரம் கிராமத்தில் அமைந்துள்ள நரசிம்ம ஆஞ்சநேயர் கோவில், வெள்ள பாதிப்பு பகுதிகளாக கருதப்படும் அரசுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்து கட்டுப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை தடுப்பு சட்டத்தின் கீழ் அதிகாரிகள் கோவிலை இடிக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
Recommended Video
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் ஒருவர் கண்ணீருடன் பேசும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தயவுசெய்து கோவிலை யாரேனும் காப்பாற்றுங்கள் என்றும் நரசிம்ம ஆஞ்சநேயர் கோவிலை அதிகாரிகள் இடிக்க வந்துள்ளார்கள்.
நேற்று முன் தினம் மாலை 5 மணிக்கு மேல் தான் அதிகாரிடம் இருந்து நோட்டீஸ் கொடுக்கப்பட்டது என்றும் கால அவகாசம் கூட கொடுக்காமல் நேற்று திடீரென இடிக்க வந்துள்ளதாகவும் அந்த பெண் கதறி அழுதவாறு பேசுகிறார்.

பேரிடர் மேலாண்மை சட்டம் 2005
மேலும் நேற்று முந்தினம் 17ஆம் தேதியிட்டு அரசு தரப்பில் அனுப்பட்ட நோட்டீஸில், பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 கீழ் இந்த பகுதி மாவட்ட நிர்வாகத்தால் வெள்ள பாதிக்கும் இடங்களாக குறியீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த இடத்தில் நரசிம்ம ஆஞ்சநேயர் கோவில் கட்டுப்பட்டு தங்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி அனுப்பிய நோட்டீஸுக்கு இதுவரை தங்களிடம் உரிய பதில் எதும் தெரிவிக்கப்படவில்லை என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிரந்தர தீர்வு
மேலும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் பிரிவு 30படி வடகிழக்கு பருவமழை பாதிப்பு ஏற்படாத வண்ணம் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற தவறும்பட்சத்தில், சட்ட விதிகளின்படி உடனடியாக ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுவதுடன் தங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கபடுவதாக சொல்லப்பட்டுள்ளது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை
இதனிடையே தற்போது நேற்று முன் தினம் நோட்டீஸ் அனுப்பிய நிலையில் ஆக்கிரமிப்பு பகுதியாக குறிப்பிடப்பட்ட நரசிம்ம ஆஞ்சநேயர் கோவிலை காவல்துறையினர் உதவியுடன் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் இடிக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்து முன்னணியினர்
இதையடுத்து அரசின் இந்த செயலை அப்பகுதி மக்கள் மற்றும் இந்து முன்னணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இச்செயலை கண்டித்துள்ளனர். மேலும் எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தேவையில்லாமல் இதை இடிக்கிறாங்க, தயவு செய்து வந்து கோவிலை காப்பாற்றுங்கள் என்று கண்ணீருடன் கதறியப்படி பேசும் வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அரசு அலுவலகங்கள்
பத்தாண்டுக்கு மேலாக கோவில் நிலங்களில் அமைந்துள்ள அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவற்றிற்கு வாடகை நிலுவை பாக்கி இருக்கும் போது ஆக்கிரமிப்பு என்று கூறி கோவிலை இடிக்கும் வேலையில் ஈடுபடும் அரசின் செயல் கண்டனத்துக்குரியது என்று நெட்டிசன்கள் தங்கள் கருத்துகளை கூறி வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications