தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு சாலையில் பாய்ந்த சரக்கு ரயில்.. ஜஸ்ட் மிஸ்.. வண்டியோடு போச்சு!
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சரக்கு ரயில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு சாலையை நோக்கிச் சென்றதால் அப்பகுதியில் இருந்த வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓடினர்.
காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையத்தில் சரக்கு முணையம் செயல்பட்டு வருகிறது. இந்த சரக்கு முனையத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து அவ்வப்போது வரும் சரக்கு ரயில்கள் வந்து நிற்கும். சரக்கு ரயில்களில் இருந்து சரக்குகள் லாரிகள் மூலம் இங்கிருந்து எடுத்துச் செல்லப்படும்.

இந்நிலையில் இன்று கர்நாடக மாநிலம் பெல்லாரியிலிருந்து இரும்பு தொழிற்சாலைக்கு காயில் ஏற்றி வந்த சரக்கு ரயில் காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையத்தில், கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ரயில், தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு சாலை நோக்கிச் சென்றது. இதனால், அப்பகுதியில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.
எனினும், சரக்கு ரயில் பெட்டிகள் தடுப்புச் சுவரை உடைத்தன. தடுப்பு கட்டைகள் உடைந்து விழுந்ததில் அங்கு நின்றிருந்த இருசக்கர வாகனங்கள் ரயில் பெட்டி விழுந்ததில் நசுங்கி சேதமடைந்தன. அதில் வந்தவர்கள் குதித்து ஓடியதால் உயிர் தப்பினர்.
வாக்கி டாக்கி சிக்னல் கோளாறு காரணமாக, ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்த முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. ரயில்வே கேட் போடப்பட்டிருந்தால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் காஞ்சிபுரம் போலீசார், பொதுமக்கள் யாரும் உள்ளே வராமல் இருக்க அப்பகுதிகளில் தடுப்புகளை அமைத்தும், போக்குவரத்தை மாற்றுப் பாதையில் திருப்பி விட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்?












Click it and Unblock the Notifications