செல்வப்பெருந்தகை வாயை மூடிக்கொண்டு இருப்பது நல்லது.. இல்லைனா வேற மாதிரி ஆகிரும்: எச்.ராஜா எச்சரிக்கை
காஞ்சிபுரம்: செல்வப்பெருந்தகைக்கு பாஜகவை பற்றி பேச அருகதை இல்லை எனவும் பேச முயற்சித்தால் அவருடைய பின்புலங்களை ஆராய வேண்டிய வரும் என்பதால் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என்றும் எச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி தனியாக 99 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 240 தொகுதிகளில் வென்றது, பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி மொத்தமாக 292 இடங்களைக் கைப்பற்றியது.

பாஜக வளர்ச்சியா?: தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைக்க உள்ளது பாஜக. தமிழ்நாடு, புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. பாஜக அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது.
எனினும், தமிழ்நாட்டில் பாஜக 11 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. இதனை வளர்ச்சி என அக்கட்சியினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற வாக்குகள் பாமகவின் வாக்குகள் என்று கூறியிருந்தார்.
செல்வப்பெருந்தகைக்கு எச்.ராஜா எச்சரிக்கை: இதற்கு பாஜக தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜக குறித்துப் பேச செல்வப்பெருந்தகைக்கு எந்த அருகதையும் இல்லை எனக் கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய எச்.ராஜா, "அவர் இதுவரை எத்தனை கட்சிகளில் இருந்தார்? என்ன பொறுப்பு வகித்தார்? அவர் மீது என்ன கிரிமினல் வழக்கெல்லாம் உள்ளது என்பது குறித்து பேச வேண்டி வரும். செல்வப்பெருந்தகை வாயை மூடிக்கொண்டு இருந்தால் அவருக்கு நல்லது. இல்லையென்றால் அவருடைய பின்புலங்களை ஆராய வேண்டிய வரும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ப.சிதம்பரத்துக்கு கணக்கும் தெரியவில்லை: மேலும் பேசிய எச்.ராஜா, “ப.சிதம்பரம் அவர்களுக்கு பொருளாதாரம் தான் தெரியாது என்றால் அவர்களுக்கு கணக்கு கூட தெரியவில்லை. பாஜக ஏற்கனவே 430 தொகுதியில் போட்டியிட்டு மீதியை கூட்டணிக்கு ஒதுக்கியது. அதில் 240 தொகுதி வெற்றி பெற்றது. ஆனால் ப.சிதம்பரம் கணக்கு தெரியாமல் 99 வித்தியாசம் தெரியாமல் பேசுகிறார். வயது மூப்பு காரணமாக இதுபோன்று பேசி வருகிறார்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வேண்டும் எனவும், மோடி அரசு தோல்வி பெற வேண்டும் எனவும் இஸ்ரேலில் உள்ள தனியார் அமைப்பு மூலம் வேலை செய்ததாக விஷயங்கள் வெளிய வந்துள்ளது. இது போன்று தேச துரோக பணி செய்தவர்கள் யார் என்று கண்டறிய விசாரணை நடத்தப்பட உள்ளது. எதிர்க்கட்சிகள் வாக்கு பிரிந்ததால் தான் திமுக வெற்றி பெற்றதே தவிர கடந்த முறை பெற்ற வாக்குகளை விட இந்த முறை திமுக வாக்கு வங்கி குறைந்து உள்ளது.
மிருக வதை தடுப்புச் சட்டத்தில்: அனைத்து மதங்களுக்கும், அனைத்து மேம்பாடும் நடைபெற்று கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் மோடி ஆட்சி செய்து வருகிறார். ஆனால் காங்கிரஸ் கட்சி, மதப் பிரிவினைகளை உண்டாக்கும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளில் கூட சிறுபான்மையினரை குறிப்பிட்டுப் பேசியது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை குறிப்பிட்டு ஆடுகளை வெட்டிய திமுகவினர் மீது மிருக வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications