அத்தி வரதர் விழா குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை பாயும்: கலெக்டர் எச்சரிக்கை
Recommended Video

காஞ்சிபுரம்: அத்தி வரதர் விழா குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற அத்தி வரதரை தரிசிக்க நேற்று ஒரே நாளில் 3லட்சம் பேர் குவிந்தனர். ஏகாதேசி மற்றும் விடுமுறை நாள் என்பதால் ஞாயிற்றுக்கிழமையான நேற்று லட்சக்கணக்கான மக்கள் பல மணி நேரம் நின்று அத்தி வரதரை தரிசித்தனர். இதனால் காஞ்சிபுரம் நகரமே மக்கள் வெள்ளத்தால் நிறைந்து காணப்பட்டது.

நேற்று வெளி மாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து அத்திவரதரை தரினம் செய்ய குவிந்த நிலையில் அவர்களிடம் போலீசார் கூட்டம் அதிகமாக இருப்பதால் நாளை வருமாறு திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் வெளியூரில் இருந்து வந்த பக்தர்கள் ஏன் திருப்புி அனுப்புகிறீர்கள் என போலீசாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா யாரையும் திரும்பி போகச்சொல்லவில்லை என மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர்கூறுகையில், "கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பக்தர்களை ஒவ்வொரு இடத்திலும் நிறுத்தி நிறுத்தி தரிசனம் செய்ய அனுமதித்து வருகிறோம்.
அத்தி வரதர் தரிசனத்துக்காக நேற்று ஏராளமான பக்தர்கள் திரண்டதால் கடும் கூட்டல் நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக வதந்திகள் பரப்பப்படுகிறது. ஆனால் அதை யாரும் நம்ப வேண்டாம். அத்தி வரதர் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடிக்கை எடுக்கப்படும்.
ஆகஸ்டு 1-ந்தேதி முதல் அத்தி வரதர் நின்ற கோலத்தில் காட்சியளிக்க உள்ளதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை முன் கூட்டியே செய்து வருகிறோம். கோவிலுக்கு உள்ளேயும், வெளியேயும், போதுமான மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, மருந்துகளும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு உள்ளது" இவ்வாறு கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications