காஞ்சிபுரத்தில் தேவிகாவுக்கு மலர்ந்த காதல்.. சரத்குமாரின் சைலண்ட் வேலை! எஸ்பி வாசல்ல விழுந்து.. பரபர
காஞ்சிபுரம்: நம்முடைய நாட்டில் குடும்ப வன்முறை பெருகி கொண்டிருப்பதாகவும், இதுதொடர்பான வழக்குகளும் அதிகரித்து வருவதாகவும், தேசிய மகளிர் ஆணையத்தில் பதிவாகியுள்ள வழக்குகளின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த குடும்ப வன்முறைகளால் இளம் வயதினரின் விவாகரத்துகளும் பெருகிவிட்டதாக நீதிமன்றங்களும் கவலை தெரிவிக்கின்றன. மற்றொருபக்கம் கள்ளக்காதல் வன்முறைகளும் அதிகமாகி கொண்டிருக்கின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர் தேவிகா.. இவருக்கு 29 வயதாகிறது.. இவர் காஞ்சிபுரத்தை சேர்ந்த கார்த்தின் என்பவரை 10 வருடங்களுக்கு முன்பு காதலித்து வந்தார்.. பிறகு அவரையே திருமணமும் செய்து கொண்டார். தேவிகா தம்பதிக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

காஞ்சிபுரத்தில் தேவிகாவின் காதல்
ஆரம்பத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை துவங்கிய நிலையில், தேவிகா வாழ்வில் பிரச்சனைகள் முளைத்தன.. கார்த்திக் குடிக்கு அடிமையானவராக இருந்துள்ளார். குடியை விட சொல்லி பலமுறை தேவிகா அறிவுறுத்தியும்கூட, கார்த்திக் கேட்கவில்லை.. நாளுக்கு நாள் கார்த்திக்கின் மதுப்பழக்கம் அதிகமாகிவிட்டதுடன், குடும்பத்தையும் கவனிக்காமல் இருந்துள்ளார்.. இறுதியில், திருமணமாகி 3 வருடங்களிலேயே கணவரை பிரிந்துவிட்டார் தேவிகா.
சரத்குமாருடன் கள்ள உறவு
இந்நிலையில், கடந்த 2020ல், தேவிகா ஒரு தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார்.. அப்போது அதே கம்பெனியில் சரத்குமார் என்பவர் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார்.. ஆரம்பத்தில் தொடங்கிய இவர்களது நட்பு, நாளடைவில் வலுவானது.
தேவிகாவுக்கு ஏற்கனவே திருமணமாகி, கணவரை பிரிந்து வாழ்பவர் என்று தெரிந்தும், அவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்துகொள்வதாகவும் சரத்குமார் கூறியதாக தெரிகிறது.. தனித்து வாழ்ந்து வந்த தேவிகாவும், சரத்குமாரை காதலிக்க துவங்கினார்..
பிறகு இருவரும் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார்களாம். இதற்கு பிறகு அடிக்கடி உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர்..
தேவிகா கர்ப்பம் கருக்கலைப்பு
ஒருகட்டத்தில் தேவிகா கர்ப்பமானார்.. இந்த விஷயத்தை சரத்குமாரிடம் சொல்லவும், உடனே கருவை கலைக்குமாறு சரத்குமார் கட்டாயப்படுத்தியிருக்கிறார். அதுமட்டுமல்ல, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வரை தேவிகாவுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்த சரத்குமார், மறுநாளே திங்கட்கிழமை இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டாராம்..
இதனால் அதிர்ச்சியடைந்த தேவிகா கேட்டதற்கு, சரத்குமார் குடும்பத்தினர் தேவிகாவை ஆபாசமாக திட்டியிருக்கிறார்கள்.. சரத்குமாரால் அளவுக்கு அதிகமான ஏமாற்றத்துக்கு ஆளான தேவிகா, உடனே காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி ஆபீசில் புகார் அளிக்க வந்தார்.
3 பவுன் தங்க நகைகள்
அப்போது செய்தியாளர்களிடம் தேவிகா சொல்லும்போது, "சரத்குமாரை நம்பி ரூ.1 லட்சம் கடன் வாங்கி கொடுத்தேன். 3 பவுன் நகைகளையும் தந்தேன்..
ஆனால், அவருக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு உள்ளது. இதைக்கேட்டதற்கு, சரத்குமாரின் குடும்பத்தினர் என்னை மிரட்டுகின்றனர். என்னை ஏமாற்றிய சரத்குமார் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும.. சரத்குமாரிடம் நான் இழந்த பொருட்களையும் மீட்டுத் தர வேண்டும் என்று கண்ணீருடன் சொன்னார்..
பிறகு கையில் மனுவுடன் எஸ்பி அலுவலகத்தில் மனுகொடுக்க தேவிகா சென்றார்.. அப்போது அந்த அலுவலக வாசலிலேயே திடீரென மயங்கி விழுந்துவிட்டார்.. இதற்கு பிறகு அங்கிருந்தவர்கள் தண்ணீர் தெளித்து தேவிகாவை ஆசுவாசப்படுத்தினார்கள்.. பின்னர் மனுவை தந்துவிட்டு சென்றார்.. மனு கொடுக்க வந்தபோது, திடீரென பெண் மயங்கி விழுந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications