காஞ்சிபுரத்தில் ஆச்சரியம்.. கலெக்டர் ஆபீஸ்ல வந்த சத்தம்.. கிட்ட போய் பார்த்த ஆபீசர்ஸ்.. நெகிழ்ச்சி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று நெகிழ்ச்சியை கூட்டி வருகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு உதவுவதற்காகவே, உதவி மையங்கள் பல செயல்படும்.. குறிப்பாக, ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், பருவ மழை மற்றும் பேரிடர் காலங்களில் செயல்படும் விதமாக உதவி மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. அந்தவகையில், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்திலும் உதவி மையம் செயல்பட்டு வருகிறது.

இதனிடையே, சமீப காலமாகவே, மாநில தேசிய நெடுஞ்சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிவதால் விபத்துகள் ஏற்படுவதாகவும், பொதுமக்கள் இதனால் பாதிக்கப்படுவதாகவும், புகார்கள் எழுந்தது.
புகார்கள்: இந்த புகார்களின் பேரில், மாநகராட்சிக்கு சாலையில் சுற்றி தெரியும் கால்நடைகளை பறிமுதல் செய்ய, மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியிருந்தார்.. அவ்வகையில், நேற்றுமுன்தினம் தினம் 8 மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், ஜவ்வாது மலை கோசாலையிலும் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று மாலை, காஞ்சிபுரம் மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலக பின்புறம் திடீரென சத்தம் கேட்கவும், அலுவலக ஊழியர்கள் ஓடிச்சென்று பார்த்துள்ளனர்.. அப்போது, அங்கு மேய்ந்து கொண்டிருந்த நிறைமாத பசு, ஒன்று கன்று ஈன்றிருப்பது தெரியவந்தது... இதைப்பார்த்ததுமே, அங்கிருந்த அலுவலர்கள் கால்நடை மருத்துவமனையின் உதவியை நாடினார்கள்..
முதலுதவி: அடுத்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம், நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ், டாக்டருடன் அங்கு வந்து நின்றது.. பின்னர், கால்நடைக்கு தேவையான முதல் உதவிகளை, டாக்டர்கள் செய்தனர். ஆனால், முதலுதவி செய்வதற்காக, டாக்டர்கள் அருகில் சென்றபோது, அந்த பசு அவர்களை தன்னிடம் நெருங்கவிடவில்லையாம்.. அதனால் தயங்கியே நின்று கொண்டிருந்ததாம்.
அதற்கு பிறகு, டாக்டர்கள், அந்த கன்றுக்குட்டியை, பசு மாட்டின் அருகில் கொண்டு வந்து நிறுத்தி, அதற்கு பிறகு, பசுமாட்டுக்கு முதலுதவி செய்தார்களாம்.. முதலுதவிக்கு பிறகு, கால்நடை மருத்துவர்களால் அந்த பசுமாடு நலமுடன் எழுந்து நின்றது.
நெகிழ்ச்சி: இறுதியில், அந்த பசுமாட்டின் உரிமையாளர் யார் என்பதை அறிந்து, இனிமேல் இதுபோன்ற நிலைமையில், பசுமாட்டை தனியே விட வேண்டாம் என்று அறிவுறுத்திவிட்டு சென்றனர்.. பசுமாடு கன்றுக்குட்டியை ஈன்று, உடல்நலம் குன்றியதுமே, பேரிடர் மேலாண்மை துறை அலுவலக ஊழியர்கள், உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து, பேருதவி புரிந்துள்ளனர். கால்நடையின் அவசர தேவையை உணர்ந்து உதவிய ஊழியர்களை, அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications