காஞ்சிபுரத்தில் சிக்கிய ஷியாமளா.. காலையிலேயே சுற்றிவளைத்த போலீஸ்.. மாநகராட்சி அதிகாரி வீட்டில் பரபர
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.. இதனால் இன்று அதிகாலையில் இருந்தே பரபரப்பு நிலவிவருகிறது.
தமிழகத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் எண்ணிக்கைகள் பெருகி வருகிறது. அதிலும் பத்திரப்பதிவு துறையில் பெண் அதிகாரிகளே லஞ்சம் வாங்கி கைதாகி வருவது அதிகரித்து வருகிறது.

பெண் அதிகாரிகள்: லஞ்சம், ஊழல் தொடர்பாக அரசு ஊழியர்கள், அதிகாரிகளும் ஊழல் தடுப்பு போலீசாரால் தொடர்ந்து சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வரும்நிலையில், காஞ்சிபுரத்திலும் ஒரு அதிகாரி சிக்கியிருக்கிறார்..
காஞ்சிபுரம் மாநகராட்சி நகரமைப்பு பிரிவு அதிகாரியாக பணியாற்றியவர் சியாமளா.. காஞ்சிபுரம் மாநகராட்சி முன்னாள் நகர் நகரமைப்பு பிரிவு அலுவலர் ஆவார்.. வருமானத்துக்கும் அதிகமாக இவர், சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் சென்றபடி இருந்தன. இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு,ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சியாமளா: இதையடுத்து, சியாமளா வீட்டிற்கு திடீரென இன்று காலை 6 மணிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.. காஞ்சிபுரம் ராஜகோபால் பூபதி தெருவில் உள்ள சியாமளாவின் வீட்டுக்கு பத்துக்கும் மேற்பட்ட கார்களில் அதிகாரிகள் காரில் வந்து இறங்கினார்கள். ஆய்வாளர் கீதா தலைமையில் போலீசார் இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள்.
பெண் அதிகாரி வீட்டில் சோதனை நடைபெறுவதையொட்டி, வீட்டை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.. இதனால், அந்த பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது. அதேபோல, காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலர்களிடையேயும் இந்த ரெய்டானது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிக சொத்து: வருமானத்திற்கு அதிகமாக பல மடங்கு சொத்து சேர்த்த புகார் தொடர்பாகவே இந்த விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது.. எனவே, வரவு செலவு கணக்குகளையும், வருமானத்தை மீறி சொத்து சேர்த்து இருக்கிறாரா? என்பது குறித்தும் இந்த சோதனை நடந்து வருகிறதாம்..
புகாரின் அடிப்படையில் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை துவங்கிய நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தற்போது உறுதியாகி உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எனினும், முழுமையான விசாரணைக்கு பிறகே, அனைத்து தகவல்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications