காஞ்சிபுரம் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024 LIVE: மீண்டும் எம்பியான ஜி.செல்வம்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் லோக்சபா தேர்தலில் திமுக வேட்பாளர் ஜி.செல்வம் 5,86,044 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். தற்போது 2ஆவது முறையாக எம்பியாக தேர்வாகியுள்ளார்.

காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில் ஜி.செல்வம் (திமுக), ராஜசேகர் (அஇஅதிமுக), வி. ஜோதி (பாமக), வி.சந்தோஷ்குமார் (நாம் தமிழர்) உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள்.

Lok Sabha Election 2024 kanchipuram 2024

இந்த தொகுதி 2008ஆம் ஆண்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது. இதில் செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் (தனி), மதுராந்தகம் (தனி), உத்தரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் இரு தனித் தொகுதிகளும் 4 பொதுத் தொகுதிகளும் உள்ளன.

காஞ்சிபுரம் தொகுதி பிரிக்கப்பட்ட பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெ.விஸ்வநாதன் வென்றுள்ளார். அது போல் 2014 ஆம் ஆண்டு அதிமுகவின் கே.மரகதமும் 2019ஆம் ஆண்டு ஜி.செல்வமும் வென்றுள்ளனர்.

2009 ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டால் இங்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ், திமுக, அதிமுக என 3 கட்சிகளும் தலா ஒரு முறை வென்றுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த ஊர் காஞ்சிபுரம். இந்த தொகுதியில் அதிமுகவும் திமுகவும் நேரடியாக களம் காண்கிறது.

திமுக சார்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு கு.செல்வம் போட்டியிட்டு தோல்வியுற்றார். இதையடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு மீண்டும் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றார். தற்போது 3ஆவது முறையாக அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். கூட்டணி கட்சியின் ஆதரவுடன் களம் இறங்கியுள்ளார். இவர் கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தவில்லை என சொல்லப்படுகிறது.

அது போல் அதிமுக சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்ட ராஜசேகருக்கு காஞ்சிபுரம் தொகுதியில் அதிக அறிமுகம் இல்லை. ஆயினும் இவர் செங்கல்பட்டு, சென்னை புறநகர் பகுதிகளில் முக்கியமானவர்.

பாமகவின் ஜோதி வெங்கடேசன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு கடைசி நேரத்தில் இந்த தொகுதி பாஜக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் வேட்பாளர் அறிவிப்பு இந்தத் தொகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு கடைசியாக அறிவிக்கப்பட்டது. இந்த 3 வேட்பாளர்களுடன் நாம் தமிழர் கட்சியின் வி.சந்தோஷ்குமார் களத்தில் இறங்கியுள்ளார்.

2024 தேர்தல் முடிவுகள் நிலவரம்

காஞ்சிபுரத்தில் லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தபால் ஓட்டுகளுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதில் திமுக வேட்பாளர் ஜி.செல்வம் 5,86,044 வாக்குகளை பெற்று வென்றுள்ளார். அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 3,64,571 வாக்குகளுடன் தோல்வி அடைந்தார். இருவருக்குமான வாக்கு வித்தியாசம் 2,21,473 வாக்குகள் ஆகும். பாமக வேட்பாளர் ஜோதி 1,64,931வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார்.

முந்தைய தேர்தல் முடிவுகள்:

2009-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்

பெ. விஸ்வநாதன் (காங்கிரஸ்)- 3,30,237
டாக்டர் ராமகிருஷ்ணன் (அதிமுக)- 3,17,134
தமிழ்வேந்தன் (தேமுதிக)- 1,03,560

2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்

கே.மரகதம் (அஇஅதிமுக)- 4,99,395
ஜி.செல்வம் (திமுக)- 3,52,529
சி.இ.சத்யா (மதிமுக)- 2,07,080

2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிவுகள்

ஜி.செல்வம் (திமுக)- 6,84,004
கே.மரகதம் (அதிமுக)- 3,97,372

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+