Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தள்ளுவண்டி டிபன் கடையில் "சிரித்த" பெண்.. இரவில் கதறிய கள்ளக்காதலியின் மகன்.. கலங்கி போன காஞ்சிபுரம்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சிறுவன் விவகாரத்தில் குற்றவாளியிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. இந்த சம்பவத்தை கேட்டு, ஒட்டுமொத்த மாவட்டமும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது. அதிலும் குற்றவாளி தந்த வாக்குமூலம், மக்களை உறைய வைத்து வருகிறது.

காஞ்சிபுரம் கலெக்டர் ஆபீஸ் அருகே நேரு நகரில் வசித்து வருபவர் தனம்... கணவனை பிரிந்த இவருக்கு 8 வயதில் ஷோபனா என்ற மகளும், 6 வயதில் குகன் என்ற மகனும் இருக்கிறார்கள்...

kanchipuram kancheepuram

அதே பகுதியில், தன்னுடைய அம்மாவுடன் தள்ளுவண்டியில் டிபன் கடை வைத்து உள்ளார். அப்போதுதான், காஞ்சிபுரம் பரந்தூர் நில எடுப்பு அலுவலகத்தில் மசால்சியாக பணியாற்றிவரும் ராஜேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது கள்ளக்காதலாகவும் உருவானது.

இதனால், தனம் வீட்டுக்கு அடிக்கடி ராஜேஷ் வந்துபோயிருக்கிறார்.. அப்படித்தான், கடந்த சனிக்கிழமையும் தனம் வீட்டுக்கு வந்த ராஜேஷ், அன்று இரவு கிளம்பி செல்லும்போது, தனத்தின் 2 பிள்ளைகளையும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

திடீர் பாதிப்பு: மறுநாள் விடிகாலை தனத்துக்கு போன் செய்த ராஜேஷ், 6 வயது மகன் குகனுக்கு திடீரென உடல் நலம் சரியில்லாமல் போய்விட்டதாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாகவும் கூறியிருக்கிறார். அதன்படியே பைக்கில் சிறுவனை அழைத்து சென்றுள்ளார் ராஜேஷ்.. ஆனால், டாக்டர்கள் குகனை பரிசோதித்து விட்டு, அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக சொன்னார்கள்.

ஆனால், சிறுவனின் உடம்பில் பல இடங்களில் ரத்த காயங்கள் இருந்ததால், போலீசுக்கு தகவல் தரப்பட்டது. அவர்களும் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தனத்தின் மகள், 3ம் வகுப்பு படிக்கும் ஷோபனா, சம்பவத்தன்று ராஜேஷ் வீட்டில் தங்கியிருந்ததால், என்ன நடந்தது என்பது பற்றி போலீசாரிடம் சொன்னாள்.. "என் தம்பியை ராஜேஷ் அங்கிள் அடித்து மிதித்து தள்ளிவிட்டார்... அதனால் என் தம்பி செத்துட்டான்" என்று தெளிவாக சொன்னதாக தெரிகிறது.

ரத்தக்கறை: இதனால், போலீசார் ராஜேஷ் வீட்டுக்கு சென்று ஆய்வு செய்தபோது, குகனின் ரத்தக்கறை படிந்த டிரஸ் விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ந்தனர்.. இதையடுத்து, குகனின் சாவில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து, ராஜேஷையும் கைது செய்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தன்னுடைய வீட்டுக்கு அழைத்து சென்றதுமே, செல்போனில் ஆபாச படங்களை, 6வயது குழந்தைக்கு காட்டினாராம் ராஜேஷ்.. அத்துடன், ஓரினச்சேர்க்கையிலும் ஈடுபட்டிருக்கிறார்.. இதுபற்றி வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டியுள்ளார்.. இதனால் பயந்துபோன சிறுவனும், இதுபற்றி யாரிடமும் சொல்லமாட்டேன் என்று கூறியிருக்கிறான்.

ஓரினச்சேர்க்கை: பிறகு ராஜேஷ் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டபோது மறுத்து சத்தமிட்டதால் சிறுவன் குகனை தாக்கியதும் பின்னர் அவனை வீட்டில் வந்து விட்டு சென்று இருப்பதும் தெரியவந்தது.

அடுத்த சில நிமிடங்களில் குகனுக்கு உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.. திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளான்.. அதற்கு பிறகுதான், பக்கத்திலுள்ள மருத்துவமனைக்கு, தன்னுடைய பைக்கில் அழைத்து சென்றிருக்கிறார் ராஜேஷ்.. இதையடுத்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து நிலஅளவையர் ராஜேசை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் தனத்தின் மகளுக்கும் ஆபாச படங்களை காட்டி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்தது. இதுபற்றியும் போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதவி ஆய்வாளர்: கையில் ஓரளவு பணபுழக்கம் கொண்ட, ராஜேஷூக்கு 34 வயதாகிறது.. காஞ்சிபுரம் நில அளவை பிரிவில் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வந்தாலும், பரந்தூர் விமான நிலைய திட்டத்திலும் நில அளவையில் பணியாற்றி வந்துள்ளார்.. இவருக்கும் கல்யாணமாகிவிட்டது. ஆனால், மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டாராம். தள்ளுவண்டியில் டிபன் சாப்பிட வரும்போதுதான் தனத்தின் வறுமையை தெரிந்து கொண்டு, அவரிடம் நெருங்கி பழகியிருக்கிறார்..

கணவன் இல்லாத பெண் என்பதால், அறக்கட்டளை மூலம் சிறுவனையும், சிறுமியையும் படிக்க வைப்பதாகவும் தனத்திடம் உறுதியும் தந்துள்ளார்.. இதனால், தன்னுடைய மகன், மகள் ராஜேஷூடன் நெருங்கி பழகியபோதும், தனம் தவறாகவே நினைக்கவில்லை.. தனத்தின் இந்த நம்பிக்கையைதான் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டுள்ளார் ராஜேஷ்..

பிள்ளைகள்: சம்பவத்தன்று, 2 பிள்ளைகளையும் வீட்டுக்கு அழைத்து செல்ல வேண்டாம் என்று, தனத்தின் அப்பா ராஜேஷை தடுத்துள்ளார்.. ஆனால், தனம்தான், முழு சம்மதம்தந்து, பிள்ளைகளை ராஜேஷூடன் அனுப்பி வைத்தாராம். புத்தி தடுமாறி போய், பிள்ளையையும் பறிகொடுத்து கதறி கொண்டிருக்கிறார் தனம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+