Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முந்திரிதோப்பில் வந்த சத்தம்.. துடித்த கணவன்.. அந்தம்மா புதருக்குள்ளே.. மாமல்லபுரத்தில் இரட்டை கொலை

மாமல்லபுரத்தில் வயதான தம்பதியை கொன்று நகையை பறித்த கும்பலை போலீஸ் தேடிவருகிறது

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: மாமல்லபுரத்தில் நடந்த இரட்டை கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.. இந்த கொலைக்கு உண்மையான காரணம் என்ன என்பது குறித்தும் ஆராய்ந்து வருகிறார்கள்!!

மாமல்லபுரம் அடுத்துள்ளது நெம்மேலி என்ற கிராமம்.. இங்கு ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான முந்திரி தோப்பு ஒன்று உள்ளது... இந்த முந்திரி தோப்பில் சில வீடுகளும் உள்ளன.

அதாவது, இந்த தோப்பில் உள்ள இடங்களை வாடகைக்கு விட்டு, அதில் வீடு கட்டி தங்கி கொள்ள பொதுமக்களுக்கு அறக்கட்டளையை சேர்ந்த நிர்வாகிகளே அனுமதியை தந்துள்ளார்கள்.

 முந்திரித்தோப்பு

முந்திரித்தோப்பு

அந்த வகையில் நெம்மேலியை சேர்ந்த சகாதேவன் மற்றும் அவரது மனைவி ஜானகியும் வாழ்ந்து வந்தனர்.. சகாதேவனுக்கு 85 வயதாகிறது.. ஜானகிக்கு 80 வயதாகிறது.. இவர்கள் இந்த தோப்பிலேயே குடிசை வீடு கட்டி, அதில் வாடகைக்கு வசித்து வந்திருக்கிறார்கள். இந்த தம்பதிக்கு 3 மகன்கள், 2 மகள்கள் இருக்கிறார்கள்.. இவர்கள் எல்லாருக்குமே திருமணமாகி விட்டது. அதனால் சகாதேவனும், ஜானகியும் மட்டும் இந்த குடிசை வீட்டில் வசித்து வந்தனர்.. இந்நிலையில், நேற்றிரவு வழக்கம் போல இருவரும் சாப்பிட்டு விட்டு கொஞ்சநேரம் ஓய்வு எடுத்துள்ளனர்..

 சகாதேவன்

சகாதேவன்

பிறகு, புழுக்கம் அதிகமாக இருந்ததால், காற்றுக்காக கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கி உள்ளனர்.. அப்போது நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் வீட்டிற்குள் வேகவேமாக நுழைந்தனர்.. நன்றாக குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்த சகாதேவனை தட்டி எழுப்பினார்கள்.. இதனால் அவர் பதறிப்போய் எழுந்தார்.. எதிரே நிற்பவர்களை பார்த்ததுமே அதிர்ச்சியடைந்து கூச்சல் போட்டார்.. இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், சத்தம் போடவேண்டாம் என்று சொல்லி கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர்... ஆனால் பதற்றத்திலும், பயத்திலும் சகாதேவன் கூச்சல் போட்டுள்ளார்.. அந்த சத்தம் கேட்டு ஜானகியும் எழுந்துவிட்டார்..

 அறுபட்ட கழுத்து

அறுபட்ட கழுத்து

சகாதேவன் சத்தம் போட்டதால், கோபமடைந்த மர்ம நபர்கள், அவரை கத்தியால் சரமாரியாக குத்தினார்கள்.. இதனால் ரத்தம் கொட்டி, வலியால் சகாதேவன் அலறினார்.. உடனே அந்த மர்ம நபர்களை ஜானகி தடுக்க முயன்றார்.. அப்போது அவரையும் அடித்து நொறுக்கி, கத்தியாலேயே அவரது கழுத்தை அறுத்தனர்.. அவருக்கும் ரத்தம் கொட்டியது.. அந்த நேரத்தில், அவரது கழுத்தில் கிடந்த தங்க தாலி, செயின், மூக்குத்தி, என 20 சவரன் நகைகளை பறித்து கொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர். கொஞ்ச நேரத்திலேயே சகாதேவனும், ஜானகியும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துவிட்டனர்.. நள்ளிரவு நேரம் என்பதால், இவர்கள் சத்தம் போட்டது, அந்த முந்திரி தோப்பில் யாருக்குமே கேட்கவில்லை..

 கதறல்கள்

கதறல்கள்

இன்றுகாலைதான், தம்பதி 2 பேரும் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்துள்ளது.. உடனே மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்து, தம்பதியின் சடலங்களை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையையும் துவக்கி உள்ளனர்.. இதற்காகவே, மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன் தலைமையில் 3 தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள், கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

 முந்திரி தோப்பு

முந்திரி தோப்பு

இந்த தம்பதிகள் முந்திரி தோப்பில் தனியாக இருந்தாலும், 2 நாட்களுக்கு ஒருமுறை பிள்ளைகள் வந்து இவர்களை பார்த்துவிட்டு செல்வது வழக்கமாம்.. அப்படித்தான் காலையில் வீட்டுக்கு மகன் வந்துள்ளார்.. 2 பேரையுமே காணவில்லை என்று தேடியிருக்கிறார்.. வீட்டிற்கு இடது புறத்தில் சகாதேவன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்திருப்பதை கண்டு கதறியுள்ளார்.. ஆனால், ஜானகியை காணோமாம்.. எனவே, அம்மாவை காணவில்லை என்று மாமல்லபுரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், சகாதேவனின் உடலை மீட்டு முதலில் போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பிவைத்துவிட்டனர்.

 புதருக்குள்ளேயே

புதருக்குள்ளேயே

அதற்கு பிறகு ஜானகியின் சடலத்தை தேடியிருக்கிறார்கள்.. முந்திரிதோப்பிலேயே ஒருபுதரின் அருகே ஜானகி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்ததை இன்று காலையில்தான் கண்டுபிடித்தனர்.. அப்போதுதான் அவரது கழுத்தில் இருந்த நகைகள் மாயமானதும் தெரியவந்தது. முதலில் சகாதேவனை மர்ம கும்பல் அடித்துக் கொன்றுள்ளது.. இதனை கண்ட ஜானகி அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடியபோது அவரையும் தாக்கி கழுத்தை அறுத்து கொன்று, புதர் பகுதியில் வீசியிருக்கலாம் என்கிறார்கள்.

 முந்திரிகாடு

முந்திரிகாடு

தனியாக இருந்த வயது முதிர்ந்த தம்பதியரை நகைக்காக கொன்றார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்று போலீஸார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள். காரணம், இந்த தம்பதி கொலை நடந்த வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில்தான் டாஸ்மாக் கடை உள்ளதாம்.. அங்கு வந்த மர்ம நபர்கள் யாரேனும் வயதான தம்பதியினர் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்டு கொன்றிருக்கலாம் என்கிறார்கள்.. அல்லது முந்திரிகாட்டை குத்தகை எடுப்பது தொடர்பாக வேறு சிலரும் போட்டிபோட்டி வந்ததாக தெரிகிறது.. இந்த தகராறில் கொலை நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+