'அவர்’ முதல்வரானால் மகிழ்ச்சி..நடிகர்கள் அரசியலுக்கு வருவாங்க..அறிவிருக்காது! தா.மோ.அன்பரசன் தடாலடி
காஞ்சிபுரம்: நடிகர்கள் அரசியலுக்கு வருவதாக கூறுவார்கள். அவர்களை ரசிக்கலாம். ஆனால் அரசியலில் அவர்களால் ஜெயிக்க முடியாது. நடிகர்களை ரசிப்பதோடு நிறுத்தி விட வேண்டும். நடிகர்களுக்கு அறிவு இருக்குமா என்றால் இருக்காது. ஆட்சி நடத்த முடியாது. ஆட்சி நடத்துவது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயமா? என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் அய்யப்பன்தாங்கல் பகுதியில் திமுக இளைஞரணி சார்பாக உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதிதாக நிர்வாகிகளை சேர்க்கும் வகையில் வீடு தேடி சென்று நிர்வாகிகள் உறுப்பினர்களை சேர்த்தனர். இதில் சிறப்பு அன்பரசன் கலந்துகொண்டு புதிய உறுப்பினர்களுக்கு வரவேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர்,”நமது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்வரானால் அதில் எனக்கு மகிழ்ச்சி தான். வருகின்ற காலங்களிலே நடிகர்கள் வருவார்கள்.. சீமான் போன்றவர்கள் அரசியலுக்கு வருவதாக கூறுவார்கள். அவர்களை ரசிக்கலாம்.
ஆனால் அரசியலில் அவர்களால் ஜெயிக்க முடியாது. நடிகர்களை ரசிப்பதோடு நிறுத்தி விட வேண்டும். நடிகர்களுக்கு அறிவு இருக்குமா என்றால் இருக்காது. ஆட்சி நடத்த முடியாது. ஆட்சி நடத்துவது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயமா? ஒரு கட்சி நடத்துவது என்பது சாதாரண விஷயமா?
எவ்வளவு பெரிய கட்சியான திமுகவே கடந்த பத்து ஆண்டுகள் தெருவில் நின்றோம். தமிழகத்தின் ஒரு சிறிய சந்து மூலை முடுக்கிலெல்லாம் இரண்டு குடும்பங்கள் திமுக குடும்பமாக இருக்கும். திமுக இல்லாத ஊரே கிடையாது. அவ்வளவு பலமாக இருந்தோம். ஆனால் நாமே ஆட்சியை இழக்க நேரிட்டது.
நடிகர்கள் கூடியதும் அவர்களை பார்க்க கூடும் கூட்டத்தை தங்களுக்கு வாக்குகளாக மாறும் என நினைக்கிறார்கள். அது நடக்காது. கூட்டத்தை பார்த்தவுடன் முதலமைச்சராகி விடலாம் என அரசியலுக்கு வருகிறார்கள்.
இது இப்போது எடுபடாது. எம்ஜிஆர் காலத்தோடு அது போய்விட்டது. அதற்குப் பிறகு ஜெயலலிதா இருந்தார். ஜெயலலிதாவுடன் முற்றிலும் சினிமா மோகம் போய்விட்டது. வரும் காலங்களில் நடிகர்களின் கனவுகளை பொய்யாக்க வேண்டுமென்றால் நமது அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். அப்படி செய்யும் போது யாரையும் நாம் நம்பியிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.” என்றார்.
-
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
வைத்திலிங்கம் நிம்மதி.. ரூ.28 கோடி முறைகேடு வழக்கு ஓவர் ஓவர்.. கோர்ட்டில் சொன்ன லஞ்ச ஒழிப்புத்துறை! -
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல் -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்












Click it and Unblock the Notifications