எனக்கா வெறுப்பு கண்.. கண்ணாடிதான் கருப்பு.. ஆனால் ஓபிஎஸ்ஸுக்கு உள்ளமே கருப்பு.. ஸ்டாலின் தாக்கு
துணை முதல்வர் ஓபிஎஸ் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
காஞ்சிபுரம்: கருப்பு கண்ணாடி அணிந்து.. வெறுப்பு கண்ணோடு நான் பார்க்கிறேன் என்று ஓபிஎஸ் சொல்கிறார். நானாவது சில சமயத்திலதான் கருப்புக் கண்ணாடி அணிகின்றேன். ஆனால் ஓபிஎஸ் கருப்பு உள்ளத்தோடு எப்பவுமே இருக்கிறார்" என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சின்ன காஞ்சிபுரம் திராவிட நாடு அலுவலக கட்டிடத்தின் முகப்பில் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் முழு உருவச் சிலைகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
மோடி தலைமையில் பாசிச ஆட்சி நடக்கிறது. நதிகள் இணைக்கப்படவில்லை. அதி நவீன நகர திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. கருப்புப் பணத்தினை மீட்டு எல்லோர் கணக்கிலும் 15 லட்சம் போடுவேன் என்றார். 15 ரூபாய் கூட போடவில்லை.

உள்ளாட்சி தேர்தல்
மத்தியில் மன்னர் ஆட்சியும் மாநிலத்தில் கொத்தடிமை ஆட்சியும் நடைபெற்று வருகின்றது. ஜிஎஸ்டி வரி ரூ.5454 கோடியினை மத்திய அரசிடம் கேட்டுப்பெற தமிழக அரசுக்கு திராணியில்லை. நீதி மன்றம் எச்சரித்தும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை. 21 எம்எல்ஏக்களின் பதவி பறிக்கப்பட்டும் அங்கேயும் தேர்தல் நடத்தப்படவில்லை.

மிரட்டும் பாஜக
மக்கள் பிரச்சனைகளை பற்றி கவலைப்படாமல் மோடியின் காலடியில் விழுந்து கிடக்கிறார்கள். ஆனால் சிறிய கட்சிகள் கூட பாஜகவை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள். அதனால்தான் அதிமுகவை மிரட்டி கூட்டணிக்கு அடிபணிய வைத்துகொண்டிருக்கிறார்கள்.

உதவாக்கரை பட்ஜெட்
சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை உதவாக்கரை பட்ஜெட் என்று சொன்னேன். அதனால் வார்த்தையினை சபாநாயகர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிட்டார். ஆனால் ஓபிஎஸ், பதிலளித்து பேசும்போது 'எதிர்க்கட்சி தலைவர் பட்ஜெட்டை உதவாக்கரை பட்ஜெட் என்கிறார் என பேசி, அதே வார்த்தையை அவை குறிப்பிலே ஏறுவதற்கு வழியும் செய்து விட்டு... எதிர்கட்சித் தலைவர் கருப்பு கண்ணாடி அணிந்து வெறுப்பு கண்ணோடு பார்க்கிறார்' என கூறுகிறார்.

ஜெ.மரணம்
நானாவது சில சமயத்திலதான் கருப்புக் கண்ணாடி மட்டுமே அணிகின்றேன். ஆனால் ஓபிஎஸ் கருப்பு உள்ளத்தோடு உள்ளார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என்று அவரது சமாதிக்கு சென்று சபதம் செய்தார். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த மர்மம் என்னவென்று கண்டுபிடிக்கப்படும்" என்றார்.
-
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
6ஆம் வகுப்பு முதல் மும்மொழி கொள்கை! இந்தி திணிப்பை கண்டித்து சிபிஎஸ்இக்கு ஸ்டாலின் கண்டனம் -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
சிபிஎஸ்இ-யில் அறிமுகமாகும் மும்மொழி கொள்கை.. ஸ்டாலின் எதிர்ப்புக்கு மத்திய கல்வி அமைச்சர் கொடுத்த பதில் -
புதுவையில் ஏப்.6-ல் ராகுல் பிரச்சாரம்! ஸ்டாலினும் மாலையில் பரப்புரை! -
கருணாநிதியை வீட்டுச் சிறையில் வைத்திருந்தேனா? நாக்கில் நரம்பிருக்கா பழனிசாமி? ஸ்டாலின் ஆவேசம் -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications