சத்தமில்லாமல் வந்து நின்ற மா.சுப்பிரமணியன்.. 4 பேராமே.. "ஆன் தி ஸ்பாட்" ஆக்ஷன்.. வாவ் மதுராந்தகம்
மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் 4 டாக்டர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்
காஞ்சிபுரம்: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று 4 டாக்டர்களை சஸ்பெண்ட் செய்துள்ளார்.. என்ன காரணம்?
யாரெல்லாம் தங்கள் பணியை சரிவர செய்வதில்லையோ, அவர்கள் மீது சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.. குறிப்பாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரடியாகவே, சில ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
அந்தவகையில் திடீர் திடீரென அரசு மருத்துவமனைகளில் ஆய்வை மேற்கொள்கிறார்.. நோயாளிகளை காக்க வைத்து பணிக்கு தாமதமாக வரும் அரசு மருத்துவர்கள், முன்அறிவிப்பு இல்லாமல் லீவு எடுக்கும் டாக்டர்கள் என யாராக இருந்தாலும், அவர்கள் மீது சுப்பிரமணியன் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

வாழப்பாடி
இப்படித்தான் சில மாதங்களுக்கு முன் மதுரைக்கு சென்றிருந்தார் அமைச்சர் சுப்பிரமணியன்.. அப்போது கொரோனா தாண்டவமாடிய சமயம்.. விமான பயணிகளிடம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்படுவதை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்ய அமைச்சர் வந்திருந்தார்.. பிறக, வாழப்பாடி அருகே அய்யங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றும் கொரோனா டெஸ்ட் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்தார்.. அவருடன் சுகாதாரத்துறை அதிகாரிகளும் சென்று அவரது ஆலோசனைகளை கேட்டுக் கொண்டனர்.

மிஸ்ஸிங்
அந்த ஆய்வின்போது, ஆரம்ப சுகாதார மையத்தின், டியூட்டி டாக்டர் அப்போது பணியில் இல்லாமல் இருந்தார்.. சொல்லாமல் கொள்ளாமல் லீவும் எடுத்திருந்தார்.. அந்த டாக்டர் பெயர் பூபேஷ்குமார்.. பணியில் பூபேஷ்குமார் இல்லாததை கண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் அங்கேயே அவரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டார்.. இப்போதும் அதுபோல ஒரு அதிரடி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடந்துள்ளது.

டாக்டர்கள்
மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்... அந்த மருத்துவமனையில் மொத்தம் 16 டாக்டர்கள் உள்ளனர். ஆனால் அந்த 16 பேரில் 4 டாக்டர்கள் இன்று ஆஸ்பத்திரிக்கு வரவில்லை.. 4 பேருமே இதுகுறித்து எந்தவித அறிவிப்பையும் மருத்துவமனைக்கு தரவில்லை.. மகப்பேறு டாக்டர் மிர்லின், மயக்கவியல் துறை டாக்டர் பிரபாவடிவுக்கரசி, எலும்பு முறிவு டாக்டர் ஹர்ஷாபாலாஜி, தொண்டை காது மூக்கு காது சிறப்பு டாக்டர் கிருத்திகா ஆகிய 4 பேரும்தான், இன்று பணியில் இல்லை என்பது தெரியவந்தது.

ஸ்ட்டிரிக்ட்
இதையடுத்து, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.. துறை ரீதியாக 17 b ஆணைப்படி ஊக்கத்தொகை பிடித்தம் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.. அதுமட்டுமல்ல, மருத்துவமனையில் முறையாக ஆய்வு செய்யாத மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் ரமாமணியை டிரான்ஸ்பர் செய்யவும் மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆன் தி ஸ்பாட்டில் உத்தரவிட்டுள்ளார். சுப்பிரமணியத்தின் இந்த அதிரடியை பார்த்து மதுராந்தகமே மிரண்டு போய் கிடக்கிறது என்றாலும், இதுபோன்ற "கறார்" நடவடிக்கைகளால் மாவட்ட மக்கள் நிம்மதியும், நம்பிக்கையும் அடைந்துள்ளனர்..!!












Click it and Unblock the Notifications