அத்திவரதரை தரிசிக்க திமுக தலைவர் ஸ்டாலின் வந்தால் வரவேற்பீர்களா.. தமிழிசை கலகல பதில்
காஞ்சிபுரம்: அத்திவரதரை தரிசிக்க ஸ்டாலின் வருகை தந்தால் அவரை நிச்சயம் நான் வரவேற்பேன் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் தரிசனம் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் தொடங்கியது. அப்போது முக்கிய பிரமுகர்கள் விஐபி தரிசனத்தில் சென்று அருளாளர் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி அளித்து வருகிறார். இதை காண தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் காஞ்சிபுரம் வந்தார். ஏற்கெனவே சயனகோலத்தில் இருந்த வரதரை தரிசித்த இவர் 35-ஆம் நாள் வைபவமான இன்று நின்ற கோலத்தில் இருந்த பெருமாளையும் தரிசனம் செய்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் கட்சிக் கொள்கை, கோட்பாடுகளில் மாறுபாடுகள் இருந்தாலும் திமுக தலைவர் ஸ்டாலின் நிச்சயம் வந்து அத்திவரதரை தரிசனம் செய்ய வேண்டும்.
அவ்வாறு வந்தால் அவரை நிச்சயம் நான் வரவேற்பேன். அவரது குடும்பத்தினர், கட்சியைச் சேர்ந்தவர்கள் தற்போது ஒவ்வொருவராக வந்த வண்ணம் உள்ளனர். முன்பெல்லாம் யாருக்கும் தெரியாமல் கோயில்களுக்கு வருவர். ஆனால் இப்போது எந்தவித ஒளிவுமறைவின்றி அவர்கள் வருவதை நான் வரவேற்கிறேன் என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications