காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.. காரணம் இதுதான்.. முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!
மார்ச் 13ம் தேதி பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகள் திங்கட்கிழமை பாடவேளையின்படி நாளை செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்படுகிறது என முதன்மை கல்வி அலுவலர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 2022-2023ம் கல்வி ஆண்டுக்கான 12ம் வகுப்பு (பிளஸ் 2), பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான தேர்வுக்கால அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டது. இந்த அட்டவணையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் ஏப்ரல் 3ல் முடிவடைய உள்ளது. பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 14ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி முடிவடைய உள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை எழுத உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட வாரியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் நாளை பல மாவட்டங்களில் பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை வழக்கம்போல் இயங்கும் எனவும், திங்கட்கிழமைக்கான பாடவேளை பின்பற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் தற்போது அந்த அறிவிப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி நாளை காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ளார். பிளஸ் 2, பிளஸ் 1 மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு எழுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதால் நாளைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications