முதல் கதவு திறந்துடுச்சு.. தமிழக வெற்றிக் கழகத்திற்கு EC அங்கீகாரம்.. பூரித்த தவெக தலைவர் விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் கொடுத்துள்ளதாக விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக, இப்போது முதற்கதவு நமக்காகத் திறந்திருக்கிறது. மாநாட்டுக்கான அறிவிப்பு வரும் வரை காத்திருக்குமாறு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கூறியுள்ளார். இதனால் தவெக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்கள்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், அரசியல் களத்திலும் கால் பதித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கும் விஜய், வரும் 2026 சட்டமன்ற தேர்தல்தான் இலக்கு என அறிவித்து கட்சி பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.

vijay tvk election commission

தி கோட் திரைக்கு வந்த நிலையில் இன்னும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்கும் விஜய், அதன் பிறகு சினிமாவுக்கு விடை கொடுத்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை கடந்த வாரத்தில் விஜய் அறிமுகம் செய்தார். வாகை மலர், போர் யானைகள் கட்சியின் கொடியில் இடம் பெற்று இருந்தது.

மாநிலம் முழுக்க கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கட்சியின் முதல் மாநாட்டை வரும் 23 ஆம் தேதி நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. திருச்சி, சேலம் என பல்வேறு இடங்களில் மாநாடு நடத்த இடம் தேடப்பட்ட நிலையில், அங்கு இடம் கிடைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதையடுத்து, விக்கிரவாண்டியில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தை மாநாடு நடத்த தவெக நிர்வாகிகள் தேர்வு செய்தனர்.

இந்த இடத்தில் மாநாடு நடத்துவதற்காக காவல்துறையிடம் அனுமதி கேட்டு தவெக நிர்வாகிகள் அனுமதி அளித்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட காவல்துறை மாநாட்டுக்கு எத்தனை பேர் வருவார்கள், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது உள்ளிட்ட 21 கேள்விகளை கேட்டது. இந்த கேள்விகளுக்கு தவெக கட்சியும் பதில் அளித்தது.

இதையடுத்து, மாநாட்டுக்கு அனுமதி அளிப்பது குறித்து ஓரிரு நாளில் காவல்துறை அறிவிக்கும் என்று கட்சியினர் கூறியுள்ளனர். மாநாட்டில் 55 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தொகுதிக்கு ஒருவர் அவர்களுக்கு கீழ் 5 பேர் என நியமனம் செய்யப்பட்டு தொண்டர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் மாநாடு தொடர்பாக இதுவரை விஜய் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தேதி மற்றும் பிற அறிவிப்புகளை இன்று விஜய் கட்சியினருடன் பகிர்ந்து கொள்வதாகவும், இதனை அறிக்கை வாயிலாகவோ அல்லது வீடியோ வாயிலாகவோ விஜய் அதிகாரபூர்வமாக அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் அரசியல் கட்சியாக அங்கீகாரம் கொடுத்துள்ளது. இதனை விஜய் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்கிற அடிப்படைக் கோட்பாட்டோடு நாம் அரசியலை அணுகுவதும் ஒருவிதக் கொள்கைக் கொண்டாட்டமே. எனினும் முழுமையான கொண்டாட்டத்திற்காகவும், அரசியல் கட்சிக்கான சட்டப்பூர்வமானப் பதிவுக்காகவுமே நாம் இதுவரை காத்திருந்தோம். இப்போது அதற்கான அனுமதியும் கிடைத்துவிட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்காக, கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம். அதைச் சட்டப்பூர்வமாகப் பரிசீலித்த நமது நாட்டின் தேர்தல் ஆணையம், தற்போது நம் தமிழக வெற்றிக் கழகத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்து, தேர்தல் அரசியலில், பதிவுசெய்யப்பட்ட கட்சியாகப் பங்குபெற அனுமதி வழங்கி உள்ளது. இதை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக, இப்போது முதற்கதவு நமக்காகத் திறந்திருக்கிறது. இச்சூழலில், நமது கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள். தடைகளைத் தகர்த்தெறிந்து, கொடி உயர்த்தி, கொள்கை தீபம் ஏந்தி, தமிழக மக்களுக்கானத் தலையாய அரசியல் கட்சியாகத் தமிழ்நாட்டில் வலம் வருவோம். வெற்றிக் கொடியேந்தி மக்களைச் சந்திப்போம்! வாகை சூடுவோம்!.. இவ்வாறு அதில் விஜய் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழக ஆலோசனை கூட்டம் வில்லிவாக்கத்தில் இன்று நடக்கிறது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். கூட்டத்தின் முடிவில் மாநாடு தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் மற்றொரு பக்கம், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி அங்கீகாரம் வழங்கி உள்ளதால் தவெக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+