Vijay: "விஜய்யை ஏன் தொட்டோம்னு feel பண்ணுவீங்க! இனி Blastதான்!" திமுக மீது கடும் விமர்சனம்
காஞ்சிபுரம்: இந்த விஜய்யை ஏன் தொட்டோம், அவருடன் இருக்கும் மக்களை ஏன்தான் தொட்டோம்னு ஃபீல் பண்ணுவீங்க என தவெக தலைவர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்தார். ஆனால் அவர் அதிமுக, பாஜக குறித்து ஒரு விமர்சனத்தை கூட முன் வைக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

காஞ்சிபுரத்தில் இன்று மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் விஜய் கலந்து கொண்டார். முன்பதிவு செய்யப்பட்ட QR கோடு நுழைவு சீட்டுகளை பெற்ற 2000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் விஜய் பேசுகையில், மக்களை பொய்யான வாக்குறுதிகளால் ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர்களை நாங்கள் அமைதியாக பார்க்க மாட்டோம். நடித்து காட்டுபவர்களையும் கண்டிப்பாக கேள்வி கேட்போம். இந்த காஞ்சிபுரத்தைக் காத்து வாழ வைப்பது பாலாறு.
இந்த மண்ணில் வாழ்பவர்களின் ரத்தத்தோடு கலந்து ஓடும் நதி அது. ஆனால் பெயர் வைத்த தலைவர்களை சொல்லிக் கொண்டு ஆட்சியில் இருப்பவர்கள், இந்த நதிக்காக என்ன செய்திருக்கிறார்கள்?
அண்ணாவும் எம்ஜிஆரும் மக்களுக்காக இருந்தவர்கள். அவர்கள் போல் செயல்பட்டு காட்டுவோம், காட்டுவது போல நடிக்கப் போவதில்லை. மக்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது எங்கள் கடமை!
மர்மயோகி படத்தில் எம்ஜிஆரின் பெயர் கரிகாலன். அதில் அவர் ஒரு வசனம் பேசியிருப்பார். குறி வைத்தால் தவற மாட்டேன், தவறினால் குறியே வைக்க மாட்டேன் என எம்ஜிஆர் வசனம் பேசியிருப்பார். இந்த வசனம் நான் ஏன் பேசுகிறேன் என்பதை வேண்டியவர்கள் புரிந்து கொள்வார்கள்.
ஏன் விஜய்யை தொட்டோம். அவருடன் இருக்கும் மக்களைத் தொட்டோம் என ஃபீல் பண்ணுவாங்க. நமக்கு அரசியல் புரிதல் இல்லை என்கிறார்கள். யாரை பார்த்து தற்குறி என்கிறீர்கள். உங்களுக்கு ஓட்டு போடுவோரை பார்த்தா, இந்த தற்குறிகள் எல்லாம் ஒன்று சேர்ந்துதான் உங்கள் அரசியலை கேள்விக்குறி ஆக்க போகிறார்கள். அவர்கள் தற்குறி அல்ல, ஆச்சரியக்குறிகள், மாற்றத்திற்கான அறிகுறி என விஜய் பேசினார்.
அது போல் அவர் தேர்தல் வாக்குறுதிகளையும் பட்டியலிட்டார். அதில் வீடு தோறும் ஒரு மோட்டார் சைக்கிளும் காரும் அவசியம், அதற்கான வாய்ப்பை உருவாக்குவோம். அதாவது பொருளாதாரத்தை மேம்படுத்துவோம். அனைவருக்கும் நிரந்தரமான வீடு கட்டித் தரப்படும்.
வீடுதோறும் ஒரு பட்டதாரி இருக்க வேண்டும். தவெக ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். அரசு மருத்துவமனைக்கு அச்சம் இல்லாமல் மக்கள் செல்ல வேண்டும். வீட்டில் குறைந்தபட்சம் ஒருவருக்கு நிரந்தர வருமானம், அதற்கான வேலைவாய்ப்பு உருவாக்கணும்.
தொழில் வளர்ச்சியில் கவனம் இருக்கும். சட்டம் ஒழுங்கு கண்டிப்புடன், வலிமையாக இருக்கும். இதற்கான விரிவான திட்டங்கள் எல்லாம் எங்கள் தேர்தல் அறிக்கையில் இருக்கும் என விஜய் அறிவித்தார்.
விஜய்யின் பேச்சு குறித்து அரசியல் ஆர்வலர்கள் கூறுகையில், ஜனவரி மாதம் பரந்தூர் சென்ற விஜய், அதுகுறித்து தற்போதுதான் பேசினார். 10 மாதங்களுக்கு மேல் பரந்தூர் என்ற வார்த்தையை கூட அவர் பயன்படுத்தவில்லை. விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக தற்போது நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கான பணமும் விநியோகம் செய்யப்படுகிறது. இதில் இவர் எங்கிருந்து விவசாயிகளுடன் நிற்கிறார்? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
சிங்கப்பெண் நிகழ்ச்சியும் தள்ளி வச்சுட்டீங்க.. சட்டம் ஒழுங்குக்கும் அவகாசம் வேணுமா? விஜய்யை விமர்சித்த உதயநிதி -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
பரிசு வேண்டாம்.. நோட்டு கொடுங்க.. அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இறங்கிய தவெக அமைச்சர் -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
விஜய்யை திட்டமிட்டு புறக்கணித்த அமித்ஷா? கேரள முதல்வரை மீட் பண்ணிருக்காரே.. டெல்லியில் நடந்தது என்ன? -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்!












Click it and Unblock the Notifications