காஞ்சிபுரம் சபலிஸ்ட்டுக்கு.. ஒரே நேரத்தில் "ஓகே" சொன்ன 3 பெண்கள்! கடைசியில பார்த்தால்? செம ட்விஸ்ட்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை சேர்ந்த சபலிஸ்ட் ஒருவர் போலீசில் வசமாக சிக்கியிருக்கிறார்.. இந்த சம்பவத்தின் பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.. இங்கு தென் மாவட்டத்தை சேர்ந்த 3 பெண்கள் இங்கு வேலை பார்த்து வருகிறார்கள். இதற்காக ஏகனாம்பேட்டை கிராமத்தில், ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இவர்கள் 3 பேரும் தங்கியிருக்கிறார்கள்.

மர்ம ஆசாமி: இந்த வாடகை வீடு, இப்போதுதான் புதிதாக கட்டியிருக்கிறார்கள். ஆனால், இந்த வீட்டில் ஃபேன் இல்லையாம்.. அதனால் 3 பெண்களும் இரவில் மொட்டை மாடியில் தூங்கி வந்திருக்கிறார்கள். இவர்கள் தினமும் மாடியில் தூங்குவதை, ஒரு மர்ம ஆசாமி தினமும் கண்காணித்தபடியே வந்துள்ளார்.
பிறகு 3 நாட்களுக்கு முன்பு, இரவு இந்த பெண்கள் தூங்கி கொண்டிருந்தபோது, அந்த மர்மநபர் மாடிக்கு சென்று, அவர்களுடைய 3 காஸ்ட்லி போன்களையும் திருடி சென்று விட்டார்.
செல்போன்கள்: மறுநாள் காலையில், 3 பெண்களும் தங்களது செல்போன்கள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.. வழக்கமாக போன்களை யாராவது திருடி சென்றால், ஸ்விட்ச் ஆப் செய்துவிடுவது இயல்பு. எனினும், தங்களது செல்போன்களுக்கு, இந்த 3 பெண்களுமே தொடர்பு கொண்டபோது, அந்த மர்மநபர் போனை எடுத்து பேசியிருக்கிறார்.. அதுவும் அந்த பெண்களிடம், கொஞ்சி கொஞ்சி பேசினாராம்.
அதிர்ச்சி: இதனால், மேலும் அதிர்ச்சி அடைந்த பெண்கள், வேறுவழியின்றி அந்த நபரிடம் நிலையை விளக்கினார்கள். தாங்கள் 3 பேருமே வெளியூரை சேர்ந்தவர்கள் என்பதால், தாங்கள் போனை எடுக்கவில்லை என்றால் வீட்டில் பெரிய பிரச்சினையாகிவிடும் என்று கெஞ்சினார்கள். அப்போதும் அந்த மர்மநபர் மனம் மாறாமல், அந்த பெண்களை தன்னுடைய வலையில் வீழ்த்த முடிவு செய்து, ஆபாசமாக பேச ஆரம்பித்தார்.
இதனால் செய்வதறியாது தவித்த 3 பெண்களும், அக்கம்பக்கத்தினரிடம் இதை பற்றி சொல்லி உள்ளனர்.. அந்த மர்மநபரின் ரூட்டிலேயே சென்று, அவரை மடக்கி பிடிக்குமாறு 3 பெண்களுக்கும், தைரியம் தந்துள்ளனர் அந்த பகுதி மக்கள்.
ஆசைக்கு இணங்கினர்: இதையடுத்து பெண்கள், அந்த மர்மநபருக்கு போன் செய்து நைசாக பேச்சை ஆரம்பித்தனர்.. அந்த நபரின் ஆசைக்கு இணங்குவதுபோலவே பேச்சை தந்தனர்.. 3 பெண்களுமே ஓகே சொல்லிவிட்டதால், அந்த மர்மநபருக்கு குஷியாகிவிட்டது. உடனே குறிப்பிட்ட இடத்திற்கு கிளம்பி வருமாறு 3 பெண்களும், அந்த நபரை அழைத்தனர.
மர்மநபரும் டிப்டாப்படாக டிரஸ் செய்து கொண்டு, ஆசையாக ஓடினார்.. அப்போது அங்கே மறைந்திருந்த பொதுமக்கள், அந்த நபரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து, சரமாரியாக தாக்கினார்கள்.. அதற்குள் இதுகுறித்து தகவலறிந்த வாலாஜாபாத் போலீசார், விரைந்து வந்து, காயமடைந்த அந்த மர்மநபரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.. பிறகு விசாரணையையும் துவங்கின்ர.
சுகபோகி: அந்த நபரின் பெயர் சுதாகர்.. 35 வயதாகிறது.. எந்த வேலை வெட்டிக்கும் போவது கிடையாதாம்.. எப்போதுமே திருடி திருடியே வாழ்க்கையை சுகபோகமாக ஓட்டி வந்துள்ளார்.. அதேபோல, இதுவரைக்கும் 3 பெண்களை ஏமாற்றி கல்யாணமும் செய்திருக்கிறார்.. திருட்டுகளில் ஈடுபட்டு அதன் மூலம் வரும் பணத்தில் ஜாலியாக இருந்தே பழகிவிட்டதாம்.
இப்போதைக்கு காஞ்சிபுரம் நாகலத்து மேடு பகுதியில் உள்ள தன்னுடைய அக்கா வீட்டில் தங்கிவந்துள்ளாராம்.. சுதாகர் மீது செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே நிறைய திருட்டு கேஸ்கள் நிலுவையில் இருக்கிறது. இப்போது சுதாகர் மீது ஆபாசமாக பேசுதல், திருட்டு, மிரட்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்திருக்கிறார்கள்.. அத்துடன், சம்பந்தபபட்ட 3 பெண்களுக்கும் அவரவர் செல்போன்களும் கிடைத்துவிட்டன..!!
அட்ஜெஸ்ட்மென்ட்: இந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் பரபரப்பை தந்துவருகிறது.. அதாவது, தங்களுடைய செல்போனை கேட்டு இந்த பெண்கள் போன் செய்தபோது, "செல்போன் வேண்டுமென்றால் என்னிடம் "அட்ஜெஸ்ட்மென்ட்" செய்ய வேண்டும்" என்று நேரடியாகவே கேட்டாராம் சுதாகர்.. இதற்கு பிறகுதான் பொதுமக்களே, ஐடியாவும், தைரியத்தையும் அந்த பெண்களுக்கு தந்துள்ளனர்.
இப்போது சுதாகர் ஜெயிலில் உள்ளாராம். இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் யார், யார்? திருடப்பட்ட பொருட்கள் என்னென்ன? என்பது குறித்த விசாரணையையும் போலீசார் முன்னெடுத்துள்ளார்களாம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications