50 சவரன் தங்க நகையுடன் நின்ற நர்ஸ் மேரி.. அப்பறம் சொந்த வீடு! கடைசியில் கன்னியாகுமரியிலும் இப்படியா?

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: திருப்பூர் ரிதன்யா, பொன்னேரி லோகேஸ்வரி என அடுத்தடுத்த இளம்பெண்களின் மரணம், தமிழக மக்களை உலுக்கி எடுத்து வருகிறது.. வரதட்சணை கொடுமையால் அப்பாவி பெண்கள் தற்கொலைகளை நாடி சென்றுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மற்றொரு பெண் தன்னுடைய உயிரை போக்கி கொண்டுள்ளார்.. படித்த பட்டதாரி பெண்கள் இப்படியான துயர முடிவுகளை எடுத்து வருவது, மக்களை அதிர்ச்சிக்கும், கவலைக்குள்ளும் உள்ளாக்கி வருகிறது.. என்ன நடந்தது கன்னியாகுமரியில்?

கன்னியாகுமரி மாவட்டம் இனையம் அருகே உள்ளது சினத்துறை என்ற மீனவ கிராமம்.. இங்கு வசித்து வருபவர் நிதின்ராஜ்... என்ஜினியரிங் படித்துள்ள நிதின்ராஜ், ஜெபிலா மேரி என்ற நர்ஸை கடந்த 10 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்..

50 sovereign gold jewellery kanyakumari nurse marry 50

ஆனால், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.. ஆரம்பத்தில் வீடுகளில் எதிர்ப்பு கிளம்பியது என்றாலும், கடந்த ஜனவரி 8ம் தேதி பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடந்து முடிந்தது.

10 வருட காதல்

நர்ஸ் மேரிக்கு, ஏராளமான வரதட்சணையை தந்ததுடன், சொந்தமாக வீட்டையும் அவரது பெற்றோர் வாங்கி தந்துள்ளனர். எனினும், முட்டம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸ் மேரி தொடர்ந்து வேலை பார்த்து வந்திருக்கிறார்.. ஆனால், கல்யாணத்துக்கு பிறகு நிதின்ராஜ் எந்த வேலைக்கும் போகாமல் ஊர் சுற்றி வந்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை, டியூட்டி முடித்து வீட்டுக்கு வந்த நர்ஸ் மேரி, தூங்க சென்றிருக்கிறார். மனைவியை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்த நிதின்ராஜ், சிறிது நேரம் வெளியே சென்றுவிட்டு மறுபடியும் வீட்டுக்கு வந்து பார்த்தால், நர்ஸ் மேரி சடலமாக தூக்கில் தொங்கி கிடந்தாராம். மருத்துவமனைக்கு மனைவியை தூக்கி சென்றும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்துவிட்டனர்.

மேரியின் டைரி

இதையடுத்து போலீசாரின் விசாரணை ஆரம்பமானது.. அப்போதுதான், மேரியின் டைரியில் 8 பக்கத்துக்கு கடிதம் ஒன்று சிக்கியது.. அதில், "தன்னுடைய இந்த முடிவுக்கு யாரும் காரணம் இல்லை, எதிர்பார்த்த வாழ்க்கை தனக்கு கிடைக்கவில்லை" என்று எழுதியிருந்தாராம்.

ஆனால், தங்களுடைய மகளை வரதட்சணை கேட்டு, நிதின் குடும்பத்தினர் கொடுமைப்படுத்தியதாக பெற்றோர் குற்றஞ்சாட்டுகிறார்கள்.. அதாவது மகளின் திருமணத்துக்கு 50 சவரன் தங்க நகைகள், 2 லட்சம் ரூபாய் சீர்வரிசை, பைக், ரூ.7 லட்சம் ரொக்கம், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடு என அனைத்தையும் வாங்கி தந்துள்ளார்கள்.. இவ்வளவு செய்தும்கூட, கூடுதலாக 5 லட்சம் கேட்டார்கள்.

எனவே, தங்களிடமிருந்த நகைகளை அடகு வைத்து மாப்பிள்ளை வீட்டில் தந்திருக்கிறார்கள். ஒன்றரை கோடிக்கு மேல் வரதட்சணை வாங்கிவிட்டு, தங்கள் மகளை கொலையும் செய்துள்ளனர், அந்த குடும்பத்தினர் மீது நடவடிக்கை வேண்டும் என்று கண்ணீருடன் பெண் வீட்டார் குற்றம் சாட்டுகிறார்கள்..

குமரியில் பரபரப்பு

எனவே, மகளின் சடலத்தை வாங்க மாட்டோம் என்று சொல்லி போராட்டத்திலும் ஈடுபட்டனர். பிறகுதான் அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்...

இப்போது போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டால்தான், நர்ஸ் மேரி மரணத்துக்கான காரணம் தெரியவரும் என்கிறார்கள்.. வரதட்சணை கொடுமையால் குமரி பெண்ணும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது குமரி மாவட்டத்தில் பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+