குமரியில் கனமழை.. தடிக்காரங்கோணம் பகுதியில் தொட்டிப்பாலம் நிரம்பி வழிந்தோடும் வெள்ளம்.. வீடியோ
கன்னியாகுமரி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள தடிக்காரங்கோணம் தொட்டிப் பாலத்தில் நீர் நிரம்பி வழியும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. சென்னையில் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவில் மழை பெய்தது.
அதே வேளையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் மிக கனமழை தொடர்ந்து பெய்து வந்தது. ஏற்கெனவே தென்மேற்கு பருவமழையால் அந்த மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பியுள்ள நிலையில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.

கன்னியாகுமரியில் மழை
சென்னை மழை குறித்த கவலையையே சில ஊடகங்கள் கொண்டிருந்த நிலையில் தமிழ்நாடு என்றால் அது சென்னை மட்டுமல்ல என நெட்டிசன்கள் விமர்சித்தனர். இந்த நிலையில் கன்னியாகுமரியில் பெய்து வரும் மழை அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்த மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

ரப்பர் தோட்டம்
வாழை தோட்டங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. அது போல் ரப்பர் தோட்டங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

திற்பரப்பு அருவி
தொடர் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளம் சீறிப்பாய்கிறது. கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர் கனமழையால் நாகர்கோவில் ஒழுகினசேரி பழைய ஆற்றில் தண்ணீர் நிரப்பி புரவசேரி பகுதியில் ஊருக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. சண்முகபுரம், முஞ்சிறை, செண்பகராமன் புதூர், சென்னித்தோட்டம், குழித்துறை, லாயவிளக்கு உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மக்களை பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்து செல்கிறார்கள்.

வெதர்மேன்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2010ஆம் ஆண்டுக்கு பிறகு பெய்த மழையில் இதுதான் மிகவும் அதிகமான மழை என வெதர்மேன் தெரிவித்துள்ளார். இன்று மூன்றாவது நாளாக கனமழை பெய்து வரும் நிலையில் இந்த மழை வரும் திங்கள்கிழமை முதல் குறையும் என்றும் அடுத்த இரு தினங்கள் கேரளாவில் கனமழை பெய்யும் என்றும் வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

கனமழை
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் தடிக்காரங்கோணம் தொட்டிப் பாலத்தில் நீர் நிரம்பி வழிகிறது. இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தொட்டி வடிவில் இருப்பதால் இதற்கு தொட்டிப் பாலம் என பெயரிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் இந்த மழைக்கு கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications