டீட்டெய்ல் கேட்ட ரோஸ்.. அடுத்தடுத்து வந்து விழுந்த ஆபாச படங்கள்.. மர்ம ஆசாமிக்கு குளச்சல் போலீஸ் வலை
ஏடிஎம் நம்பர் தராதால் பெண்ணுக்கு ஆபாச வீடியோ அனுப்பி உள்ளார் ஒருவர்
கன்னியாகுமரி: ஞாயிற்றுக்கிழமை மதியானம் தன் செல்போனுக்கு ஆபாச படங்களாக வந்து கொண்டிருப்பதை பார்த்ததும் ரோஸ் அலறிவிட்டார்.. இந்த வேலையை பார்த்தவர் யார் என்று குளச்சல் போலீசார் விசாரித்து வருகிறார்கள்!!
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கொட்டில்பாடு பகுதியை சேர்ந்தவர் ரோஸ்... இவரது செல்போனுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒருவர் போன் செய்திருந்தார்.. அதில் பேசியவர் தன்னை ஒரு பேங்க் ஆபீசர் என்றும், வங்கியின் எடிஎம் கார்டு நம்பர் வேண்டும், செக் செய்ய வேண்டும் என்றும் சொன்னார்.

ஆனால் ரோஸ் உஷாராகிவிட்டார்.. காரணம், ஏற்கனவே இப்படித்தான் ஒரு போன் வந்து, செல்போன் பின் நம்பர் கேட்கவும், இவரும் தந்துள்ளார்.. கடைசியில் 8 ஆயிரம் ரூபாயை யாரோ எடுத்து கொண்டு போய்விட்டார்களாம். அதனால் இந்த முறை ஏமாந்துவிடக்கூடாது என்று அந்த அதிகாரியிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டார்.
"ஆமா, இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை.. எந்த ஊர்ல ஞாயிற்றுக்கிழமை பேங்க் திறந்து வெச்சிருக்காங்க? யார் நீங்க?" என்று கேட்கவும், டக்கென அந்த போன் கட் ஆகிவிட்டது.. அடுத்த ஒரு சில நிமிடங்களிலேயே ரோஸ் போன் நம்பருக்கு ஆபாச வீடியோக்கள் வரிசையாக வர ஆரம்பித்தன.. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரோஸ், உடனடியாக குளச்சல் ஸ்டேஷனில் புகார் தந்தார்.

போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்... குளச்சல் பகுதியில் இப்படிப்பட்ட புகார்கள் நிறைய வருகிறதாம்.. கிட்டத்தட்ட 15-க்கும் மேற்பட்டோர் ஏடிஎம் கார்டு, பின் நம்பர் வேண்டும் என்று கேட்டு போன் செய்கிறார்களாம்.
வட இந்தியாவில் வந்த செல்போன் அழைப்பின்பேரில் ஏடிஎம் கார்டு எண்களை நம்பி சொல்லிவிட்டு, ஆயிரக்கணக்கான பணங்களை மக்கள் இழந்துள்ளனர். இப்படி அப்பாவிகளை ஏமாற்றி பணம் பறிப்பது யார் என தெரியவில்லை.. பணம் தராவிட்டால், ஆபாச வீடியோக்களை அனுப்பி விடுகிறார்களாம்.. அவர்களை கண்டுபிடிக்க தான் போலீசார் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications