Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷார்ஜாவில் அடுக்குமாடி குடியிருப்பை அதிர வைத்த அதுல்யா விவகாரம்.. ஏர்போர்டிலேயே சிக்கிய கணவர்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஷார்ஜாவில் கேரளாவின் கொல்லம் பகுதியை சேர்ந்த அதுல்யா என்பவர் கணவருடன் வசித்து வந்தார். அதுல்யாவுக்கு ஷார்ஜா ரோலா பார்க் பகுதியில் வேலை கிடைத்திருந்தது. புதிய வேலையில் சேர காத்திருந்தவர் வீட்டில் படுக்கை அறையில் இருந்த கோலம், சக குடியிருப்புவாசிகளை ஆடிப்போக வைத்துள்ளது. இந்த வழக்கில் அவரது கணவரை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன், ராஸ் அல் கைமா, மற்றும் புஜைரா போன்ற பல்வேறு முக்கிய நகரங்கள் இருக்கின்றன.இதில் அபுதாபி தான் தலைநகரம் ஆகும். துபாய் சுற்றுலா நகரமாகவும், வணிக நகரமாகவும் இருக்கிறது. ஷார்ஜா நகரமும் மிக முக்கியமான நகராகும்.

Atulya s husband who lived in an apartment in Sharjah UAE was arrested at the airport

அதுல்யா சதீஷ் தம்பதி

இந்நிலையில் கேரளாவின் கொல்லம் மாவட்டம் சாஸ்தாம்கோட்டையை சேர்ந்த 40 வயதாகும் சதீஷ் என்பவருக்கும் 30 வயதாகும் அதுல்யாவுக்கும் 12 வருடங்களுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. இவர்களுக்கு 10 வயதில் பெண் குழந்தை உள்ளது. அதுல்யா சதீஷ் தம்பதியின் மகள் அதுல்யாவின் தந்தையுடன் கேரளாவில் தங்கி 5-ம் வகுப்பு படித்து வருகிறார். கணவன்-மனைவி இருவரும் ஷார்ஜா ரோலா பார்க் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.


அதுல்யா முடிவு

அதுல்யாவுக்கு கடந்த இரண்டு மாதம் முன்பு அங்குள்ள வணிக வளாகத்தில் வேலை கிடைத்திருக்கிறது. அதில் சேருவதற்காக அதுல்யா காத்திருந்தார். இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் 19-ந்தேதி அதுல்யா அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த கோலம் சக குடியிருப்புவாசிகளை ஆடிப்போக வைத்துள்ளது. அவர் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

அவரது இறப்புக்கு என்ன காரணம் என்று போலீசார் விசாரித்தனர். அவரது கணவர் மீது சந்தேகம் திரும்பியது. சம்பவம் நடந்த ஜூலை 19ம் தேதிக்கு ஒரு நாள் முன்பு தான், தனது சகோதரியுடன் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி உள்ளாராம் அதுல்யா. பின்னர் தனது கணவரிடம் வேலைக்கு செல்ல சிறிது பணம் கேட்டாராம். ஆனால் அவரது கணவர் சம்மதிக்கவில்லையாம்.


வீட்டில் இருந்த கோலம்

அந்த பணத்துக்கு ஈடாக சில தங்க நகைகளை வைத்துக்கொள்ளுமாறு கூறினாராம். அதன்பின்னர் அதுல்யாவின் கணவர் சதீஷ் அடுக்குமாடி குடியிருப்பை விட்டு வெளியே சென்றுவிட்டதாக கூறியிருக்கிறார். அப்போது அதுல்யா வீட்டில் தனியாக இருந்தருக்கிறார்.. கணவர் திரும்பி வரும்போது கதவு திறந்த நிலையில் அவர் இறந்து கிடந்ததாக கேரளாவை சேர்ந்த சமூக பணியாளர் அப்துல்லா காமம்பலம் தெரிவித்துள்ளார்,

அதுல்யாவின் பெற்றோர் புகார்

இதனிடையே இறப்பதற்கு முன்னதாக தனக்கு கணவனால் ஏற்பட்ட காயங்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவரது சகோதரிக்கு அனுப்பி வைத்துள்ளார் அதுல்யா. இதையடுத்து அதுல்யாவின் பெற்றோர், மகளின் முடிவுக்கு அவரது கணவன் சதீஷ் தான் காரணம் என்றும், அவரை அடித்ததாகவும் குற்றம்சாட்டி கொல்லம் மாவட்டம் சவரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சதீஷ் கைது

இதைதொடர்ந்து சதீஷ் மீது தற்கொலைக்கு தூண்டுதல், வரதட்சணை கொடுமை உள்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. அதை தொடர்ந்து சதீசுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.இந்த நிலையில் நேற்று மதியம் திருவனந்தபுரம் விமான நிலையம் வந்த சதீசை விமான நிலைய குடிமைப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவரை குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+