பாஜக ஆதரவுடன் நகராட்சி தலைவர் தேர்தலில் வென்ற திமுக.. இதெல்லாம் லிஸ்ட்லயே இல்லையே!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை நகராட்சி, குளச்சல் நகராட்சிகளில் பாஜக ஆதரவுடன் திமுக வென்றது.
மேயர், துணை மேயர், நகராட்சி சேர்மேன், நகராட்சி துணை சேர்மேன், பேரூராட்சி சேர்மன், பேரூராட்சி துணை சேர்மேன் உள்ளிட்ட பதவிகளுக்கு நேற்றைய தினம் மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் பல இடங்களில் களேபரங்களும் பல இடங்களில் சுவாரஸ்யங்களும் நிகழ்ந்தன. அது போல் பல இடங்களில் விட்டுக் கொடுப்பதும், விடாபிடியாமல் இருந்ததும் நடைபெற்றன.

கன்னியாகுமரி
இந்த நிலையில் கன்னியாகுமரியில் நடந்த ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழித்துறை நகராட்சி சேர்மேன் வேட்பாளராக பெர்லின் ஷீபாவை திமுக அறிவித்தது. ஆனால் குழித்துறை நகர திமுக செயலாளர் பொன் ஆசைத் தம்பி ஷீபாவை எதிர்த்து போட்டியிட்டார். இவர்களுடன் சேர்ந்து காங்கிரஸ் சார்பில் பிரபின் ராஜாவும் போட்டியிட்டார்.

திமுக தலைமைக் கழகம்
இதில் தலைமைக் கழகத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பெர்லின் ஷீபாவுக்கு 9 வாக்குகளும் திமுக போட்டி வேட்பாளர் பொன் ஆசைத் தம்பிக்கு 10 ஓட்டுகளும் காங்கிரஸ் வேட்பாளர் பிரபின் ராஜாவுக்கு 2 வாக்குகளும் கிடைத்தன. 11 வாக்குகள் கிடைத்தவர் வெற்றி பெற்றவர் என்ற நிலையில் யாருக்கு அத்தகைய வாக்குகள் கிடைக்கவில்லை.

மீண்டும் தேர்தல்
இதனால் மீண்டும் தேர்தல் நடந்தது. அதில் பொன் ஆசை தம்பி 12 வாக்குகள் பெற்றார். பெர்லின் ஷீபா 9 வாக்குகள் பெற்றார். தலைமைக் கழகம் அறிவித்த வேட்பாளரை வீழ்த்தி ஆசைத்தம்பி வெற்றி பெற்றார். அது போல் குளச்சல் நகராட்சியில் திமுக சார்பில் ஜான்சன் சார்லஸ் திமுகவால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

திமுக போட்டி வேட்பாளர்
ஆனால் திமுக போட்டி வேட்பாளரான நசீர் வென்றார். குளச்சலில் மொத்தமுள்ள 24 கவுன்சிலர்களில் நசீர், ஜான்சன் சார்லஸ் ஆகியோர் தலா 12 வாக்குகளை பெற்றனர். இதையடுத்து நடந்த குலுக்கலில் நசீர் வெற்றி பெற்றார். குளச்சல், குழித்துறை நகராட்சிகளில் திமுக போட்டி வேட்பாளர்கள் பாஜக ஆதரவுடன் சேர்மேன் பதவிகளை கைப்பற்றினர்.

எதிரிக்கு எதிரி நண்பன்
எதிரிக்கு எதிரி நண்பன் என்பார்கள் அந்த சூட்சமத்தை பாஜக கையிலெடுத்துள்ளது. அதாவது திமுக தலைமை கழகத்திற்கு எதிராக போட்டியிட்ட வேட்பாளர்களை பாஜக ஆதரித்துள்ளது. இதுகுறித்து திமுக தலைமை நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications