கமல்ஹாசன் உண்மையை பேசியதால் பாஜகவுக்கு கசக்கிறது.. ஜவாஹிருல்லா விளாசல்!
கன்னியாகுமரி: கோட்சே தொடர்பாக கமல்ஹாசன் உண்மையை பேசியதால் பாஜகவுக்கு கசக்கிறது என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் தமுமுக சார்பில் நடைபெற்ற இப்தார் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதைத்தொடர்ந்து ஜவாஹிருல்லா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கு தீர்வு ஏற்படுத்தாத அதிமுக அரசை அகற்ற வேண்டும்.
இந்திய தேர்தல் ஆணையம் தற்போது மக்களின் நம்பிக்கையை இழந்து தலைகுனிந்து நிற்கிறது. இலங்கையில் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட குழுவுக்கும் இஸ்லாமுக்கும் சம்பந்தம் இல்லை.
ஏற்கனவே, இலங்கை முஸ்லீம் அமைப்புகள் ஜெகரான் ஹாஷ்மி என்ற பயங்கரவாதி குறித்து அரசிடம் புகார் கூறியும் அவ்வமைப்பு குறித்து அரசுக்கு தெரிந்தும் அதை கண்டு கொள்ளாத இலங்கை அரசு தான் இந்த பயங்கரவாதத்திற்கு காரணம்.
தமிழகத்தில் ஐஎஸ் ஊடுருவலோ ஆதரவாளர்களோ இல்லை. சிலர் கருத்து தெரிவித்ததன் மூலம் தமிழகத்தில் ஐஎஸ் இருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. ஐஎஸ் இயக்கம் இஸ்லாமுக்கு எதிரானது.
மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட நீட், உதய் மின்சாரம் போன்ற திட்டங்களை எதிர்த்த ஜெயலலிதாவின் நிலைபாட்டிற்கு எதிரான ஆட்சியாக தற்போதைய அதிமுக விளங்குவதோடு பாஜகவின் பினாமி அரசாக உள்ளது. இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே குறித்து உண்மையை தான் கமல் பேசியுள்ளார். உண்மையை பேசியதால் பாஜகவுக்கு கசக்கிறது. இவ்வாறு ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் பேசினார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications