பள்ளி மாணவியை ஆறு மாதங்களாக சீரழித்து கர்ப்பமாக்கிய அக்காள் கணவன் - போக்சோவில் கைது
கன்னியாகுமரி: கொழுந்தியாளை பிள்ளை போல பார்க்கவேண்டிய அக்காள் கணவனே மைனர் சிறுமி என்றும் பார்க்காமல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். ஆறு மாதங்கள் சீரழித்து கர்ப்பமாக்கிய அவனை கன்னியாகுமரி போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
படுபாதக செயலை செய்த நபரின் பெயர் ஐயப்பன் என்பதாகும். கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே காந்தி நகர் காலனியைச் சேர்ந்தவர். இவர் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு இந்திரா காலனியைச் சேர்ந்த சரண்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கேரளாவில் கட்டட காண்ட்ராக்ட் வேலை செய்து வந்த ஐயப்பனுக்கு பாக்கெட்டில் பணம் நிறையவே, திமிரும் கூடியது. இரண்டு பிள்ளைகள் பிறந்தும் காமவெறியால் தனது மனைவியின் தங்கை மீது பார்வையை செலுத்தினார்.
தனது குடும்பத்தை விட தனது மனைவியின் குடும்பத்தை அதிகம் கவனித்தார் ஐயப்பன், கொழுந்தியாள் மீது தனி கவனம் செலுத்தினார், பத்தாம் வகுப்பு படிக்கும் அந்த மாணவி, தனது அத்தானின் கவனிப்பில் நெகிழ்ந்து போனார். அதை தனக்கு சாதகமாக்கிக்கொண்டார் ஐயப்பன்.

மனைவியின் தங்கையிடம் அத்துமீறல்
அதே பகுதியில் உள்ள நபரை ஒருதலையாக காதலித்தார் அந்த சிறுமி, அந்த காதலுக்கு உதவி செய்வதாக கூறி தனியாக ஒரு இடத்திற்கு அழைத்துச்சென்று சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அதனை சொல்லி மிரட்டியே ஆறு வருடங்களாக சீரழித்துள்ளான். இதில் சிறுமி கர்ப்பமாகவே பதறிப்போன ஐயப்பன், கருக்கலைப்பு செய்ய ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றான்.

போலீசில் புகார்
காதலனால் தனது கொழுந்தியாள் கர்ப்பமாகிவிட்டதாக டாக்டர்களிடம் கூறினார். ஆனால் சந்தேகமடைந்த டாக்டர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் வருவதைப்பார்த்த ஐயப்பன் சிறுமியை விட்டு விட்டு ஓடிவிட்டார். அங்கு வந்த போலீசார் சிறுமியிடம் நடந்த சம்பவத்தை கேட்டனர். அக்காளின் கணவர்தான் தனது இந்த நிலைக்குக் காரணம் என்று அழுதுகொண்டே கூறினார்.

கர்ப்பமான சிறுமி
அக்காள் கணவன் தொடர்ந்து ஆறு மாதங்கள் தன்னை மிரட்டியே பலாத்காரம் செய்த நிலையில் சிறுமி கர்ப்பமானது தெரிந்த உடன் தனியார் மருத்துவமனைக்கு தன்னை அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளார் ஐயப்பன். அரசு மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுத்து கருவை கலைத்து விடலாம் என்று நினைத்திருந்தார். ஆனால் டாக்டர்கள் போலீசிற்கு தகவல் கொடுக்கவே, சிக்கிக்கொண்டார்.

அக்காள் கணவர் கைது
தப்பி ஓடிய ஐயப்பனை காவல்துறையினர் கைது செய்து போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காதலித்து திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னரும் மனைவிக்கு துரோகம் செய்து விட்டு அவரது தங்கை என்றும் பாராமல் மைனர் சிறுமியின் வாழ்க்கையை பாழாக்கியுள்ளான். காதல் வலையில் விழுந்த சிறுமி, அக்காளின் கணவனின் காமப்பசிக்கு இரையாகிவிட்டார். இதனால் இரண்டு பெண்களின் நிலையும் கேள்விக்குறியாகியுள்ளது.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications