600-க்கு 598 பெற்ற அதுல்யா! கைகொடுத்த 7.5%! மருத்துவராகும் கார் மெக்கானிக் மகள்!

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை படந்தாலுமூடு பகுதியை சேர்ந்த கார் மெக்கானிக் மகள் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் படிக்கும் கனவு நிறைவேறி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், தமிழக கேரள எல்லை படந்தாலுமூடு போற்றி விளை பகுதியை சேர்ந்த ஜெயக்குமார்- ஷீபா ராணி தம்பதி. ஜெயக்குமார் கார் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார்.

education neet kanyakumari

இவர்களுக்கு இரண்டு மகள்கள். இதில் முதல் மகள் அகல்யா பொறியியல் படித்து வருகிறார். இரண்டாவது மகள் அதுல்யா நாகர்கோவில் நாவல் காடு அரசு மாதிரி பள்ளியில் படித்த மாணவி ஆவார்.

12-ஆம் வகுப்பில் பள்ளியில் 600-க்கு 598 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக வெற்றி பெற்றார். எனினும் நீட் தேர்வு எழுதி அந்தத் தேர்வில் 463 மதிப்பெண் பெற்றிருந்தார்.

சிறுவயது முதலே மருத்துவர் ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில் படித்த மாணவிக்கு அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின்படி ஈரோடு அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இதனால் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேற்கு மாவட்ட பாஜக‌ தலைவர் ஆர் டி சுரேஷ் தலைமையில் மாணவி வீட்டிற்கு சென்று பொன்னாடை போர்த்தி இனிப்புகள் வழங்கி மாணவிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

"நீட் தேர்வை எதிர்த்து போராடுவதை விட்டு விட்டு அந்த நேரத்தில் படித்தால் வெற்றி பெறலாம்" என்று மாணவி தெரிவித்தார் . அது போல் "சாதாரண மக்கள் மருத்துவம் படிக்க வேண்டும் என்றால் நீட் தேவை" என்று தந்தை ஜெயக்குமார் தெரிவித்தார்.

கடந்த மே 3 ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டு ராஜஸ்தான் மாநிலத்தில் முறைகேடு நடத்தப்பட்டதை அடுத்து அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டு ஜூன் மாதம் நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் வெளியாகி மருத்துவ சேர்க்கைக்கான கவுன்சலிங் நடந்து வருகிறது. அதில்தான் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டின்படி மருத்துவம் படிக்க இடம் கிடைத்து வருகிறது.

அது போல் நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்களுக்கு மருத்துவம் பயில இடம் கிடைத்துள்ளது. நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே வெள்ளங்குளியைச் சேர்நதவர் ராம்குமார் (49). இவர் நெசவாளர். இவரது மனைவி மங்கையர்திலகம், இவர்களுக்கு வெங்கட் ஸ்ரீ, அருண், தரண் ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

நெசவுத் தொழில் செய்து வரும் ராம்குமார், பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் 3 மகன்களையும் வெள்ளங்குளி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்க வைத்தார்.

நெசவுத் தொழில் எத்தனை நலிந்திருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். எனினும் அந்த வருமானத்தில் 3 மகன்களையும் படிக்க வைத்தார்.

education neet kanyakumari

மூத்த மகன் வெங்கட் ஸ்ரீ கடந்த 2022- 2023 ஆம் ஆண்டு பிளஸ் 2 படித்தார். அவர் அப்போது நடந்த நீட் தேர்வில் 300 மதிப்பெண்கள் பெற்றார். அவருக்கு மருத்துவம் பயில இடம் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த 2025ஆம் ஆண்டு மீண்டும் நீட் தேர்வு எழுதி 420 மதிப்பெண்களை பெற்றார். இதையடுத்து இந்த ஆண்டும் மீண்டும் தேர்வெழுதிய அவர் 440 மதிப்பெண்களை பெற்றார்.

அது போல் வெங்கட் ஸ்ரீயின் இரட்டை சகோதரர்களான அருண், தரண் ஆகியோர் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி முறையே 511, 494 மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

இதையடுத்து 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் நடந்த மருத்துவ கலந்தாய்வில் 3 பேருக்கும் இடம் கிடைத்துவிட்டது. வெங்கட்ஸ்ரீக்கு நாகர்கோவில் பல் மருத்துவக் கல்லூரியிலும், அருணுக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியிலும் தரணுக்கு கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+