கன்னியாகுமரியில் கலக்கிய காங்கிரஸ்.. மாஸ் பொதுக்கூட்டம் நடத்திய ராகுல் காந்தி!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார்.
Recommended Video

கன்னியாகுமரி: காங்கிரஸ் கட்சி சார்பாக கன்னியாகுமரியில் இன்று மாபெரும் தேர்தல் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் களைகட்டி இருக்கிறது. ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடக்கிறது.
லோக்சபா தேர்தலுக்காக தமிழகத்தில் நான்கு முறை பிரதமர் மோடி பிரச்சார கூட்டங்களை நடத்திவிட்டார். தற்போது காங்கிரஸ் கட்சியும் பிரச்சார களத்தில் குதித்து இருக்கிறது.

எங்கு நடந்தது
நாகர்கோவில் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் இன்று மாலை காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. இதற்காக இன்று காலை ராகுல் காந்தி தமிழகம் வந்து இருந்தார். காலையில் சென்னையில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு சென்று அங்கு நடக்கும் கல்லூரி விழாவில் கலந்து கொண்டார்.

ராகுல் பேசினார்
அதன்பின் சென்னை லீ மெரிடியன் ஹோட்டலில் ஓய்வு எடுத்தார் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் சென்றார். இவருடன் திமுக தலைவர் ஸ்டாலினும் விமானத்தில் சென்றார். பின் அங்கிருந்து இவர்கள் ஹெலிகாப்டர் மூலம் குமரிக்கு வந்தார். அதன்பின் குமரி பொதுக்கூட்டத்தில் பேசினார்.

யார் கலந்து கொண்டார்
காங்கிரஸ் நடத்திய பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணி தலைவர்களும் பங்கேற்றனர். இதில் திமுக தலைவர் ஸ்டாலின் 20 நிமிடம் பேசினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் 20 நிமிடம் தொடர்ந்து பேசினார். பின் கூட்டணி தலைவர்கள் பேசினார்கள்.

சிறப்பு
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் தலைவர் காதர் முகைதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications