கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஊழல்வாதிகள் பயப்படுகிறார்கள்.. எங்கள் அதிரடி தொடங்கிவிட்டது.. குமரியில் மோடி வார்னிங்!

ஊழல் செய்த அனைவரும் பதில் சொல்ல வேண்டிய கால கட்டம் வந்துவிட்டது, என்று பிரதமர் மோடி கன்னியாகுமரியில் பெருமையாக பேசியுள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கன்னியாகுமரியில் பிரதமர் மோடி பேச்சு-வீடியோ

    கன்னியாகுமரி: ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம், ஊழல் செய்த அனைவரும் பதில் சொல்ல வேண்டிய கால கட்டம் வந்துவிட்டது, என்று பிரதமர் மோடி கன்னியாகுமரியில் பெருமையாக பேசியுள்ளார்.

    பிரதமர் மோடி இன்று தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் வந்தார். தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக அவர் தமிழகம் வந்துள்ளார்.

    கன்னியாகுமரியில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசினார். இதில் காங்கிரஸ் மீது அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார்.

    இறுகிய முகத்துடன் கன்னியாகுமரிக்கு வந்து இறங்கிய மோடி.. என்ன காரணம்? இறுகிய முகத்துடன் கன்னியாகுமரிக்கு வந்து இறங்கிய மோடி.. என்ன காரணம்?

    வாய்ப்பு கிடைக்கும்

    வாய்ப்பு கிடைக்கும்

    மோடி தனது பேச்சில், வாய்ப்பு கிடைக்கும் போது அதை பயன்படுத்தி செயல்படும்படி திருவள்ளுவர் கூறியுள்ளார். மக்கள் நேர்மையை விரும்புகிறார்கள்: குடும்ப அரசியலை அல்ல. மக்கள் முன்னேற்றத்தை விரும்புகிறார்கள்: ஊழலை அல்ல. மக்கள் விரும்புவது பாதுகாப்பை: அச்சத்தை அல்ல.மக்கள் விரும்புவது முன்னேற்றத்தை: வாக்கு அரசியலை அல்ல.

    மீனவர்கள் என்ன

    மீனவர்கள் என்ன

    மீனவர்களுக்கான திட்டங்களை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது.விவசாயிகள் கடன் அட்டை திட்டம் மீனவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்காக ரூ.300 கோடி ஒதுக்கியுள்ளோம். இஸ்ரோவால் தயாரிக்கப்பட்ட உபகரணங்கள் மீனவர்களுக்கு கொடுத்துள்ளோம்.உள்ளூர் மொழியில், மீனவர்களுக்கு இந்த கருவி எச்சரிக்கை கொடுக்கும்.

    நடவடிக்கை

    நடவடிக்கை

    ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.ஊழல் செய்த அனைவரும் பதில் சொல்ல வேண்டிய கால கட்டம் வந்துவிட்டது. ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை போல வரி செலுத்துவோருக்கு சலுகை செய்கிறோம்.வருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக அதிகரித்துள்ளோம்.இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் வருமான வரி விலக்கை உயர்த்த யோசித்தது இல்லை.

    பெரிய முன்னேற்றம்

    பெரிய முன்னேற்றம்

    தொழில் செய்வதற்கு உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னேறி 77வது இடத்திற்கு வந்துள்ளது.ராஜாஜியின் பொருளாதார கொள்கைகளை செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளோம். அம்பேத்கரை இரு முறை தேர்தலில் தோற்கடித்தது காங்கிரஸ்.நாடாளுமன்ற மண்டபத்தில் அம்பேத்கர் படம் வைத்தது, பாரத ரத்னா விருது வழங்கியது பாஜக கூட்டணி அரசு, என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Corrupt Politicians have to answer me and my government says PM Modi in Kanniyakumari.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X