மோடி நிகழ்ச்சியில் ஒரு ஷாக்.. தளவாய் சுந்தரத்தை கீழே இழுத்துச் சென்ற பாடிகார்ட்!
Recommended Video

கன்னியாகுமரி: பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியான தளவாய் சுந்தரத்தை, பிரதமரின் பாதுகாவலர் மேடையிலிருந்து கீழே இழுத்துச் சென்ற செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் மத்திய அரசு திட்டங்கள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் பன்னீர் செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இதில் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரமும் கலந்து கொண்டார். பிரதமர் மோடி திட்ட மாதிரி ஒன்றை பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது மேடையில் ஆளுநர், முதல்வர், தம்பிதுரை உள்ளிட்டோர் இருந்தனர். தளவாய் சுந்தரமும் பின்னால் நின்று கொண்டிருந்தார். அப்போது பிரதமரின் பாதுகாவலர் ஒருவர் தளவாய் சுந்தரத்தை கையை வலுக்கட்டாயமாக பிடித்து கீழே கூட்டிச் சென்றார்.
முதலில் பாதுகாவலரைப் பார்த்து தளவாய் சுந்தரம் முறைத்தார். ஆனால் பாதுகாவலர் கையை உடும்புப் பிடியாக பிடித்து இழுத்ததால் தர்மசங்கடமடைந்த சுந்தரம் வேறு வழியில்லாமல் இறங்கிப் போக வேண்டியதாயிற்று. தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி என்பவர் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பாலம் போல இருப்பவர். இந்த பதவியை உருவாக்கியவர் மறைந்த எம்ஜிஆர். கடைசியில் அவருக்கு பிரதமரின் மேடையில் நிற்கக் கூட அனுமதி இல்லாமல் கீழே இழுத்து விடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக விழாவில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், பிரதமர் மோடி இந்திய மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறார். தமிழ்நாடும் அவர் பின்னால் இருக்கிறது" என்றார். கடைசியில் முதல்வருக்குப் பின்னால் இருந்த தளவாய் சுந்தரத்திற்கு மேடையில் இல்லாமல் போய் விட்டது!
-
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications