கன்னியாகுமரி கள்ளக்காதல்.. இவரும் ஒரு தாய்? குழந்தையை வெந்நீரில் முக்கி, விலா எலும்பை முறுக்கி.. ஐயோ
கன்னியாகுமரி: தகாத உறவுகளும் அது தொடர்பான வன்முறைகளும், குற்றங்களும் வடமாநிலங்களை போலவே தமிழகத்திலும் அதிகரித்து வருகின்றன. இதனால் பல குடும்பங்கள் சின்னாபின்னமாகி, நடுத்தெருவுக்கு வந்துவிடுகின்றன.. கள்ளக்காதல் கொடுமையால் பாதிக்கப்படுவது பெரும்பாலும் தம்பதிகளின் குழந்தைகளாகவே இருப்பது பெரும் வேதனையை தந்து வருகிறது, 2 வருடங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் நடந்த கொடூரமும், இது தொடர்பான வழக்கின் தற்போதைய தீர்ப்பும், மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் இரையுமன்துறை என்ற இடத்தில் வசித்து வரும் தம்பதி சீனு - பிரபுஷா.. இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் இருக்கிறார்கள்.. இதில் 2வது குழந்தை பிறந்து 15 மாதங்களாகின்றன.. அந்த குழந்தையின் பெயர் அரிஸ்டோ பியூலஸ்

இவர்களது வீட்டுக்கு பக்கத்திலேயே காஞ்சாம்புறத்தை சேர்ந்த சதாம் உசைன் என்ற 32 வயது நபர் ஓட்டல் நடத்தி வந்திருக்கிறார்.. இவருக்கும் திருமணமாகி, குழந்தைகள் இருக்கிறார்கள்.. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக, குடும்பத்தை விட்டு தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
கள்ளக்காதல் ஜோடி
இந்நிலையில் 23 வயது பிரபுஷாவுக்கும், சதாம் உசைனுக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.. இந்த விஷயம் சீனுவுக்கு தெரிந்து மனவேதனையடைந்தார்.. இதனால் மனைவியை பிரிந்து சென்றுவிட்டார். அப்போது முதல் குழந்தையை மட்டும் தன்னுடன் அழைத்து சென்று விட்டார். இதனால் 15 மாத என்ற குழந்தையை பிரபுஷா வளர்த்து வந்தார்..
பிரபுஷா, சதாம் உசேன் இருவருமே குடும்பத்தை விட்டு பிரிந்ததால், கடந்த 2023ல் இருவரும் மயிலாடியில் உள்ள கோழிப்பண்ணையில் வேலைக்கு சேர்ந்துள்ளனர்.. இருவரையும் கணவன், மனைவி என்று சொல்லி, 2 நாட்கள் அங்கு தங்கியிருக்கிறார்கள்.. அப்போது இருவரும் உல்லாசமாகவும் இருந்துள்ளனர்.
உல்லாசத்துக்கு குழந்தை தடை
அந்த நேரத்தில் 15 மாத குழந்தை பசியால் அழுதிருக்கிறது.. உல்லாசத்துக்கு இடையூறாக குழந்தையின் அழுகை சத்தம் இருந்தது சதாம் உசைனுக்கு ஆத்திரத்தை தந்துவிட்டது..
இதனால், தடிமனான கம்பை எடுத்து வந்து குழந்தையை கண்மூடித்தனமாக தாக்கியிருக்கிறார்.. இதனால் வலி தாங்க முடியாமல் குழந்தை அழுதுள்ளது.. உடனே கள்ளக்காதல் ஜோடி இருவரும் சேர்ந்து, அந்த குழந்தைக்கு மதுபானத்தை ஊற்றி தூங்க வைத்துள்ளனர்.
இப்படி குழந்தைக்கு நாளுக்கு நாள் சித்ரவதைகளை இருவரும் சேர்ந்து தந்துள்ளனர்.. பிறகு, சிகரெட் நெருப்பால் 10 இடங்களில் சூடு வைத்துள்ளனர்.. அதிலும் அந்த குழந்தையை வெந்நீரில் முக்கி எடுத்திருக்கிறார்கள்.. இதனால் உடம்பெல்லாம் வெந்துபோய் குழந்தை அழுதவாறே இருந்துள்ளது.
விலா எலும்பு முறிந்தது
இதனால் கோபமடைந்த சதாம் உசைன் குழந்தையை தூக்கி தரையில் ஓங்கி அடித்துள்ளார்.. இதில் அந்த குழந்தைக்கு விலா எலும்பு முறிந்துள்ளது.. இவ்வளவு கொடுமைகளை கள்ளக்காதலன் செய்தும்கூட, அசையாமல் நின்று அனைத்தையும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாராம் பெற்ற தாய்.
இதற்கு பிறகு மூச்சு பேச்சின்றி குழந்தை இருந்ததால், உடனே மருத்துவமனைக்கு தூக்க சென்றுள்ளனர்.. ஆனால், அந்த குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டது என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர். பச்சிளம் குழந்தையை சித்ரவதை செய்தே கொன்றுவிட்டது இந்த கள்ள ஜோடி.. இறுதியில் இந்த தகவல் அஞ்சுகிராமம் போலீசாருக்கு எட்டிய நிலையில், இருவரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
அதிர்ந்த கன்னியாகுமரி
15 மாத குழந்தைக்கு மதுவை ஊற்றி, சிகரெட்டால் உடம்பை பொசுக்கி, வெந்நீரில் மூழ்க வைத்து, தரையிலேயே அடித்து விலா எலும்பையும் நொறுக்கி சித்ரவதை செய்து கொன்ற சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை அந்த நேரத்தில் ஏற்படுத்தியிருந்தது.. கொலை செய்த குற்றவாளிகளை சும்மா விடக்கூடாது, கடுமையான தண்டனை தரவேண்டும் என்றும் பொதுமக்கள் கொந்தளித்தனர்.
இதுதொடர்பான வழக்கு நாகர்கோவிலில் மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், தற்போது நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.. அதில், சதாம் உசைன், பிரபுஷாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications