கன்னியாகுமரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக கூட்டணி சரக்கு இல்லாத காலி டப்பா.. பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சனம்

Google Oneindia Tamil News

கன்னியாகுமரி: திமுக கூட்டணி சரக்கு இல்லாத காலி டப்பா என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது:

மதச்சார்பின்மைக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக நாஞ்சில் சம்பத் கூறியிருக்கிறார். அரசியலை விட்டு ஒதுங்குவதாக கூறிவிட்டு அவர் மீண்டும் வந்திருப்பதால் தமிழக மக்களுக்குத்தான் மாரடைப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

ஆர்கே நகரில் டிடிவி தினகரனின் பெற்றது டோக்கன் வெற்றி... தமிழிசை சவுந்திர ராஜன் கிண்டல் ஆர்கே நகரில் டிடிவி தினகரனின் பெற்றது டோக்கன் வெற்றி... தமிழிசை சவுந்திர ராஜன் கிண்டல்

தேமுதிக நிச்சயம் வரும்

தேமுதிக நிச்சயம் வரும்

அதிமுக,பாஜக கூட்டணியில் நிச்சயம் தேமுதிக இணையும். அது தொடர்பான பேச்சு வார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது. அதிமுக,பாஜக கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி.

 எந்த பாதிப்பும் இல்லை

எந்த பாதிப்பும் இல்லை

பாரிவேந்தர் மட்டுமில்லை... எவர் எங்குச் சென்றாலும் பாஜக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. பார்ப்பதற்கு பிரம்மாண்டம் போல காட்சி தரும் திமுக கூட்டணி சரக்கு இல்லாத காலி டப்பா.

குற்றம் சொல்வது சரியில்லை

குற்றம் சொல்வது சரியில்லை

பாகிஸ்தான் தாக்குதல் தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சருக்கு தெரிய வில்லை என்று குற்றம் சொல்வது சரியல்ல. தெரிய வேண்டிய அனைவருக்கும் அது தெரிந்துள்ளது.

பாஜகவின் அரசியல்

பாஜகவின் அரசியல்

பாகிஸ்தான் மீதான தாக்குதல் சம்பவத்தை பாஜக அரசியல் செய்வதாக கூறுவதும் சரியல்ல. பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடுத்ததன் மூலம் கிடைத்த வெற்றியை அறிவிக்கும் கடமை பிரதமருக்கு உள்ளது.

பிரதமர் கடமை

பிரதமர் கடமை

வெற்றியை கொண்டாடும் முதல் கடமை பிரதமருக்கும், 2வது கடமை எதிர்க்கட்சிக்கும் உள்ளது. அதேபோல 3வது கடமை அனைத்து கட்சித் தலைவர்களுக்கும், 4வது கடமை அனைத்து மக்களுக்கும் இருக்கிறது என்று கூறினார்.

English summary
Union Minister Pon radhaKrishnan criticized the DMK alliance with the lack of inventory.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X