உங்கள் குழந்தைகள் விளையாட்டு விடுதியில் சேர வேண்டுமா? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட பள்ளி மாணவ, மாணவிகள் விளையாட்டு விடுதியில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட அதிகாரி வினு தெரிவித்துள்ளார். விளையாட்டு விடுதி மாநில அளவிலான போட்டிகளில் 6, 7, 8, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான மாணவ, மாணவிகளுக்கான வாள் விளையாட்டு, ஜூடோ, குத்துச்சண்டை (ஆண்கள் மட்டும்) ஆகிய விளையாட்டுகளுக்கான நேரடி தேர்வு சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது.

கன்னியாகுமரி மாவட்ட விளையாட்டு அதிகாரி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டுத் துறையில் சாதனைகளை புரிவதற்கேற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விடுதிகள் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

sports hostel student

இதில் 6 முதல் 11-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான 2026-2027-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான விளையாட்டு விடுதி தேர்வு நடக்க இருக்கிறது. அதன்படி குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு போட்டியில் பங்கு பெற்று பயன்பெறலாம். இந்த விளையாட்டு போட்டிகளுக்கான மாவட்ட அளவிலான நேரடி தேர்வு நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் மாணவர்களுக்கு வருகிற 7-ந் தேதியும், மாணவிகளுக்கு 8-ந் தேதியும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்ற ஆர்வமுள்ளவர்கள் அன்றைய தினங்களில் காலை 7 மணிக்குள் விளையாட்டு மைதானத்தில் இருக்க வேண்டும்.

விளையாட்டு விடுதி மாநில அளவிலான போட்டிகளில் 6, 7, 8, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான மாணவ, மாணவிகளுக்கான வாள் விளையாட்டு, ஜூடோ, குத்துச்சண்டை (ஆண்கள் மட்டும்) ஆகிய விளையாட்டுகளுக்கான நேரடி தேர்வு சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது.

இதேபோல நீச்சல் (ஆண்கள்) விளையாட்டுக்கான நேரடி தேர்வு சென்னை ஏடிபி காம்ப்ளக்ஸ்ஸிலும், குத்துச்சண்டை (பெண்கள்) சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில், ஸ்குவாஷ் ஆண்களுக்காக நேரடி தேர்வு தூத்துக்குடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்திலும் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை மாணவர்கள் நேரில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்திட கடைசி நாள் 8.5.2026 மாலை 6 மணியாகும். எனவே குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் விளையாட்டு விடுதிகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப படிவம் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் உரிய ஆவணங்கள் பதிவேற்றம் செய்து விண்ணப்பித்து கொள்ளலாம். மாவட்ட அளவிலான தேர்வில் தேர்வு செய்யப்பட்டவர்கள் மாநில அளவிலான தேர்விற்கு தகுதி பெறுவார்கள்.

அதன் விவரங்கள் www.sdat.tn.gov.in-ல் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு அலுவலகத்தினை நேரிலோ அல்லது அலுவலக தொலைபேசி எண்ணான 04652-262060, 9487146542 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு விவரம் பெறலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+