"நடிகர் அஜித்துடன் இபிஎஸ்".. குமரி பிரசாரத்தில் தொண்டர் வழங்கிய பரிசு.. எடப்பாடி கொடுத்த ரியாக்சன்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தீவிரமாக பிரசாரத்தை தொடங்கி உள்ளார். நேற்று அவர் கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது நடிகர் அஜித் குமாரும், எடப்பாடி பழனிச்சாமியும் சேர்ந்து இருக்கும் போட்டோவை தொண்டர் ஒருவர் பரிசாக வழங்கினார். அதனை பார்த்தவுடன் எடப்பாடி பழனிச்சாமி சிரித்தபடி வாங்கி தனது வாகனத்திற்குள் வைத்து கொண்டார்.
தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தை தொடங்கி விட்டனர். குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார்.

அந்த வகையில் நேற்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமி கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். கன்னியாகுமரி தொகுதியில் தற்போது சிட்டிங் எம்எல்ஏவாக அதிமுகவின் தளவாய் சுந்தரம் உள்ளார். மீண்டும் அவரே கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் தான் நேற்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமி, தளவாய் சுந்தரத்துக்கு ஆதரவாக கன்னியாகுமரி சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். திறந்த வேனில் எடப்பாடி பழனிச்சாமி, தளவாய் சுந்தரம் ஆகியோர் நின்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.
இந்த சமயத்தில் அதிமுக தொண்டர் ஒருவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு போட்டோ பிரேம் ஒன்றை பரிசாக வழங்கினார். கூட்டத்தில் நின்ற அதிமுக தொண்டர், எடப்பாடி பழனிச்சாமியுடன், நடிகர் அஜித் இருப்பது போன்ற போட்டோவை பிரேமை எடுத்து நீட்டினார்.
திறந்த வேனில் மேல்புறம் நின்ற எடப்பாடி பழனிச்சாமி அதனை பார்த்ததும் சிரித்தபடி அந்த தொண்டரிடம் இருந்து போட்டோவை வாங்கினார். பிறகு போட்டோவை பார்த்து அவர் கேமராக்களுக்கு போஸ் கொடுத்தார். அதன்பிறகு அவர் அந்த போட்டோவை வேனுக்குள் வழங்கினார்.
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் தற்போது கட்சியை தொடங்கி உள்ளார். சினிமாவில் விஜய் இருந்தபோது அவரது ரசிகர்கள் நடிகர் அஜித் குமார் மற்றும் அவரது ரசிகர்களை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். இதனால் அஜித் குமாரின் ரசிகர்களின் ஓட்டுகள் யாருக்கு செல்லும்? என்ற கேள்வி உள்ளது.
அஜித் ரசிகர்களின் ஓட்டுகளை பெற ஒவ்வொரு கட்சியினரும் முயன்று வருகின்றனர். அந்த வகையில் நடிகர் அஜித் குமாருடன், எடப்பாடிபழனிச்சாமி இருக்கும் போட்டோவை அவருக்கு தொண்டர் ஒருவர் பரிசாக வழங்கி இருப்பது கவனம் பெற்றுள்ளது.
-
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications