இந்த பழைய ரூ500, ரூ1000 நோட்டுகளை மாற்றி தாங்க தம்பி.. கிராம சபையில் அமைச்சரையே அதிர வைத்த முதியவர்!
கன்னியாகுமரி: கிராம சபைக் கூட்டத்தில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு வந்த முதியவர், அமைச்சர் மனோ தங்கராஜிடம் கொடுத்து இந்த நோட்டுகளை மாற்றி தாருங்கள் தம்பி என கேட்டது அங்கிருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கலந்து கொண்டு மக்களை குறைகளை கேட்டறிந்தனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் ஞாலம் ஊராட்சி பகுதியில் கிராம சபை கூட்டம் நடந்தது.

அதில் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அந்த பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் குறைகளை கூறினர்.
இதை கேட்ட அதிகாரிகளும் அமைச்சரும் பிரச்சினைகளை உடனடியாக சரி செய்து தருவதாக பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்தனர். இந்த நிலையில் திடீரென 70 வயது முதியவர் ஒருவர் அமைச்சர், அதிகாரிகளை நோக்கி வந்தார். அப்போது அவர் பழைய ரூ 500, 1000 நோட்டுகளை கையில் வைத்திருந்தனர்.
அருகே வந்த அந்த முதியவர், அமைச்சரிடம் அந்த நோட்டுக்களை கொடுத்து தம்பி இதை கொடுத்துவிட்டு புதிய நோட்டுகளை மாற்றி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனால் அமைச்சர் மனோ தங்கராஜ் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் முதியவரிடம், நான் மாற்றி தருகிறேன், அதிகாரிகளிடம் சொல்கிறேன் என கூறிவிட்டு சென்றார்.
2016ஆம் ஆண்டு ரூ 500, 1000 செல்லாது என அறிவிக்கப்பட்டு அதற்கு பதிலாக ரூ 500, ரூ 2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த ரூ 2000 நோட்டுகளும் செல்லாது என்றே கடந்த மே மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கால கெடு செப்டம்பர் 30 என கொடுக்கப்பட்டிருந்த நிலையில் அக்டோபர் 7ஆம் தேதி வரை இந்த 2000 நோட்டுகளை ஒப்படைக்க கால அவகாசமாக வரும் அக்டோபர் 7-ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டுள்ளது.
ரூ 500, ரூ 1000 நோட்டுகள் மீது பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு கடந்த 7 ஆண்டுகளாக அந்த நோட்டுகள் செல்லாது என்பதே அந்த முதியவருக்கு தெரியாமல் இருந்துள்ளது அது பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணமாகும். இந்த முதியவரை போல் நிறைய மூதாட்டிகளும் , முதியவர்களும் ரூ 500, ரூ 1000 நோட்டுகளை வைத்துக் கொண்டு மாற்ற முடியாமல் தவித்து வருகிறார்கள்
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications