ஓடி வந்த இளம் பெண்கள்.. சிரித்தபடி நின்ற ராகுல் காந்தி! கன்னியாகுமரி ஒற்றுமை யாத்திரையில் சுவாரஸ்யம்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: 4 வது நாள் ஒற்றுமை நடைபயணம் இன்று காலை தொடங்கி இருக்கும் நிலையில், தன்னை நோக்கி ஓடி வந்த இளம் பெண்களுடன் நின்று பேசி செல்பி எடுத்து ராகுல் காந்தி அனுப்பி வைத்தார்.

அக்டோபர் 17 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவை பெறுக்க அக்கட்சி முடிவெடுத்து உள்ளது.

அதேபோல், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக ஒற்றுமையை ஏற்படுத்த கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை யாத்திரையை கடந்த புதன்கிழமை தொடங்கி இருக்கிறார் ராகுல் காந்தி.

 12 மாநிலங்கள்

12 மாநிலங்கள்

12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி செல்லும் ஒற்றுமை பயணத்தில் காங்கிரஸ் கட்சியின் எந்த அடையாளத்தையும் பயன்படுத்த மாட்டோம் என்றும், தலைவர்களின் புகைப்படங்கள், கட்சியின் கொடி, கை சின்னம் போன்ற எதுவும் இடம்பெறாது என்றும் இது முழுக்க முழுக்க மக்கள் சந்திப்பு பயணம் மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டது.

 3,570 கிலோ மீட்டர்

3,570 கிலோ மீட்டர்

380 பேர் கலந்துகொள்ள இருக்கும் இந்த பாத யாத்திரைக்கு மத்தியில் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 150 நாட்களில் 3,570 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு காஷ்மீரை அடையும் ராகுல் காந்தி செல்லும் வழியெங்கும் மக்களை சந்திக்க இருக்கிறார்.

 ஓடி வந்த பெண்கள்

ஓடி வந்த பெண்கள்

கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் நடக்கத் தொடங்கிய ராகுல் காந்தி நேற்று கேரள எல்லையில் உள்ள முலகுமூடு கிராமத்திற்கு வந்தடைந்தார். இன்று காலை அங்கிருந்து நடக்கத் தொடங்கிய ராகுல் காந்தி, கேரள மாநிலம் பரசலா பகுதிக்கு செல்கிறார். இந்த நிலையில் முலகுமூடு அருகே அவர் நடந்து சென்றபோது அவரை நோக்கி இளம் பெண்கள் ஓடி வந்தனர். அவர்களுக்காக நின்ற ராகுல் காந்தி புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.

 வில்லேஜ் குக்கிங் சேனல்

வில்லேஜ் குக்கிங் சேனல்

ராகுல் காந்தியின் இந்த ஒற்றுமை நடைபயணத்தில் இதேபோல் பல்வேறு சுவாரஸ்ய நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. தமிழ்நாட்டின் பிரபல யூடியூப் சேனலான வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர் ராகுல் காந்தியை நேற்று சந்தித்து பேசினர். அவர்களுடன் ராகுல் காந்தி மகிழ்ச்சியோடு உரையாடினார். கடந்த ஆண்டு வில்லேஜ் குக்கிங் சேனலில் அவர்களோடு சேர்ந்து ராகுல் காந்தி சாப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+