Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

GOAT Movie Review: விஜயகாந்த் சீன் தீ! தேமுதிக வோட்டெல்லாம் விஜய்க்குத்தான்- ரசிகர்கள் ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம், கேரள எல்லையில் உள்ள பாறசாலையில் உள்ள திரையரங்கில் கோட் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் விஜயகாந்தின் காட்சிகளை சொல்லி ரசிகர்கள் பூரித்துள்ளனர். மேலும் வரும் 2026 தமிழக சட்டசபைத் தேர்தலில் விஜயகாந்தின் ஆதரவாளர்களின் ஓட்டுக்கள் எல்லாம் விஜய்க்கு போகும் என ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest of All the Time (GOAT) திரைப்படம் இன்றைய தினம் தமிழகத்தில் 750-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

goat movie vijay venkat prabhu

இந்த படம்தான் விஜய்யின் கடைசி படம் என அவரே சொல்லிவிட்டார். இதனால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்புகள் எகிறின. விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். வரும் 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் விஜய் கட்சி போட்டியிடுகிறது.

இதனால் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டிய தேவை விஜய்க்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கோட் படத்துடன் கடைசி படம் என விஜய் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும் ஒரு இடத்தில் கூட இந்த படத்தை தனது அரசியல் பேசும் களமாக விஜய் மாற்றவில்லை என்கிறார்கள்.

இதை வெங்கட் பிரபுவே ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் CM 2026 என்ற பதிவு எண் கொண்ட வாகனத்தை விஜய் ஓட்டுகிறார். அதை பார்த்த விஜய், வெங்கட் பிரபுவிடம், "என்ன இதுல ஏதாவது உள்குத்து இருக்கிறதா" என கேட்டாராம். அதற்கு வெங்கட் பிரபு, "இல்லை தானாகவே நடந்தது" என்றாராம்.

இந்த நிலையில் இந்த படத்தின் சிறப்பு காட்சிகளை பார்த்த மக்கள் கோட் படத்தின் இரண்டாம் பாதி மிகவும் நன்றாக இருக்கிறது என்றார்கள். நிறைய சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார்கள். வெங்கட் பிரபுவின் இயக்கம் நன்றாக இருந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனும் நடித்துள்ளதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் இது குறித்த வெங்கட் பிரபுவிடம் கேட்ட போது, சிவகார்த்திகேயன் இந்த படத்தில் வரலாம், வராமலும் போகலாம் என பூடகமாகவே பேசியிருந்தார். 25 வயது இளம் தோற்றத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம் விஜய் தோன்றுகிறார். அதாவது இரட்டை வேடம் என்கிறார்கள். மூன்று வேடம் என்கிறார்கள்.

எல்லாவற்றையும் விட விஜயகாந்தின் காட்சிகள் படத்தின் ஆரம்பத்திலேயே வருகிறதாம். இந்த காட்சிகளால் விஜயகாந்த் ரசிகர்களும் விஜய்யை பாராட்டி வருகிறார்கள். முதலில் ஏஐ மூலம் விஜயகாந்தை கோட் படத்தில் கொண்டு வருவதாக கூறப்பட்ட போதே, பலருக்கு அய்யோ சொதப்பி விடுவார்களோ என்ற பயம் இருந்தது.

ஆனால் விஜயகாந்துக்கு இதை விட யாரும் சிறப்பாக அஞ்சலி செலுத்த முடியாது என ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள். ஒரு அஞ்சலி செலுத்தவே விஜயகாந்த் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். அந்த காட்சிகள் அருமையாக இருப்பதாகவும், விஜயகாந்தை போல பல நலத்திட்ட உதவிகளை விஜய் செய்துவருவதாகவும், வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் அபிமானிகள், ரசிகர்கள், தொண்டர்கள் ஆகியோரின் வாக்குகள் எல்லாம் விஜய்க்கு போகும் என ரசிகர்கள் பூரிக்கிறார்கள்.

விஜயகாந்தை வைத்து விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் 20-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். விஜய்யை வைத்து எஸ்.ஏ.சி. சில படங்களை எடுத்து அது அந்தளவுக்கு கைக் கொடுக்கவில்லை. அப்போது விஜயை தூக்கிவிட விஜயகாந்த், "செந்தூரப்பாண்டி" என்ற படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்தார். இந்த நன்றி எப்போதுமே விஜய்க்கு இருக்கிறது. அதனால்தான் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தும் போது விஜய் கண்கலங்கினார். விஜயகாந்தை உருக்கமாக விஜய் சில வினாடிகள் பார்த்துவிட்டு மீண்டும் திரும்பினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+