பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம்.. விவசாயிகள் காப்பீடு பெறுவது எப்படி? நோட் பண்ணுங்க
கன்னியாகுமரி: பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகள் காப்பீடு பெறுவது எப்படி என்பது குறித்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் விளக்கம் அளித்துள்ளார்.
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் என்பது அசாதாரண சூழ்நிலைகளால் விவசாயிகளுக்கு பயிர் இழப்பு மற்றும் பயிர் பாதிப்பு ஏற்படும் போது நிதி உதவி வழங்குதல், விவசாயிகளுக்கு புதிய மற்றும் நவீன தொழில்நுட்பங்களை எடுத்துரைத்து உற்பத்தியை மேம்படுத்த செய்தல், தொடர்ந்து விவசாயம் செய்வதன் மூலம் நிலையான வருமானத்தைப் பெற விவசாயிகளுக்கு வழிவகை செய்யவேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்டது.

இந்த பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் கடந்த 2016-ல் தொடங்கியது. 2022ம் ஆண்டு நிலவரப்படி விவசாயிகள் பிரீமியத் தொகையாக ரூ.25,186 கோடி செலுத்தியுள்ளனர். இவர்களுக்கு இழப்பீடாக கடந்த 6 ஆண்டுகளில் அக்டோபர் 31, 2022 வரை ரூ.1,25,662 கோடி வழங்கப்பட்டுள்ளது. பிரீமியத் தொகையின் பெரும் பகுதியை மத்திய, மாநில அரசுகள் ஏற்றுக் கொண்டு வருகின்றன.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழை, மரவள்ளி சாகுபடி செய்யும் விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் அறிவித்துள்ளதுடன் அதற்கான வழிமுறைகளையும் விளக்கி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் 6180 எக்டேரில் சாகுபடி செய்யப்படும் முக்கிய தோட்டக்கலை பயிர்களான வாழை மற்றும் மரவள்ளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு மேற்கொள்ள அறிக்கை பெறப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் சுமார் 4930 எக்டேர் பரப்பளவில் வாழை மற்றும் 1250 எக்டேர் பரப்பளவில் மரவள்ளி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. வாழை மற்றும் மரவள்ளி சாகுபடி செய்யும் போது ஏற்படும் இடர்பாடுகளான நடவு செய்ய இயலாமை, மழை பொய்த்தல், வெள்ளம், கடும் வறட்சி, தொடர் வறண்ட நிலவரம், நிலச்சரிவு, ஆலங்கட்டி மழை, புயல் மற்றும வெள்ளப்பெருக்கு ஆகியவற்றால் இழப்பு ஏற்படும்போது காப்பீடு செய்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது.
பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகளுக்கு ஒரே வகையான காலக்கெடு வழங்கப்படுகிறது. குத்தகை விவசாயிகளும், இத்திட்டத்தின் மூலம் காப்பீடு செய்து பயன் பெறலாம். வாழை விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4203 பிரீமியமாக செலுத்தி ரூ.84 ஆயிரத்து 50 இழப்பீடாகவும், மரவள்ளி விவசாயிகள் ஏக்கருக்கு பிரீமியமாக ரூ.1,463 செலுத்தி ரூ.29,250 இழப்பீடாகவும் பெறலாம்.
கடன் பெறும் விவசாயிகளுக்கு பிரீமியம் தொகையை அந்தந்த கடன் வழங்கும் வங்கிகள் மூலம் விருப்பத்தின்பேரில் பிடித்தம் செய்து காப்பீடு நிறுவனங்களுக்கு செலுத்தலாம். கடன் பெறாத விவசாயிகள் தங்களது அருகாமையிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொதுசேவை மையங்கள் மூலம் பிரீமியம் செலுத்தலாம்.
இதற்கு நிலத்தீர்வை ரசீது மற்றும் அடங்கல், வங்கி புத்தக நகல், ஆதார் அட்டை, புகைப்படம் போன்றவை தேவையான ஆவணங்களாகும். வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு காப்பீடு செய்ய அடுத்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 29-ந் தேதி கடைசி நாளாகும். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை அனுகி பயிர் காப்பீடு செய்து பயன்பெற்றுக்கொள்ளலாம்" இவ்வாறு கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications