விடாமல் வெளுத்து வாங்கிய கனமழை.. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி : கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அம்மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார். பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து இருக்கிறார்.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை சீசன் முடிந்துவிட்டாலும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதிலும் மேற்கு மண்டலம், தென் மண்டலத்தில் விடாமல் மழை பெய்து வருகிறது. இங்கே நேற்று இரவு கனமழை பெய்தது.

Incessant heavy rains: School holiday announced for Kanyakumari district, No leave for college

கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இரவு முழுக்க கனமழை பெய்தது. நேற்று இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில்தான் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அம்மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார். பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து இருக்கிறார்.

வானிலை நிலவரம்: வானிலை மையம் இந்த வாரத்திற்கான வானிலை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதில், 04.10.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

05.10.2023 மதல் 08.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்); நாலுமுக்கு (திருநெல்வேலி) 11, ஊத்து (திருநெல்வேலி) 10, சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), பாலமோர் (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி), குண்டாறு அணை (தென்காசி), காக்கச்சி (திருநெல்வேலி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்) தலா 7. சின்கோனா (கோயம்புத்தூர்), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 6.
பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி). புத்தன் அணை (கன்னியாகுமரி), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), பெரியாறு (தேனி), மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 5, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), சுரலாகோடு (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி) தலா 4, சோலையார் (கோயம்புத்தூர்), அடையாமடை (கன்னியாமைரி), சித்தார் (கன்னியாகுமரி), கன்னிமார் (கன்னியாகுமரி). கொட்டாரம் (கன்னியாகுமரி). சிவலோகம் (கன்னியாகுமரி). அவலாஞ்சி (நீலகிரி), தேவாலா (நீலகிரி).

தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), மேல் பவானி (நீலகிரி), பாபநாசம் (திருநெல்வேலி) தலா 3, சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), கன்னியாகுமரி, திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி}, புதுச்சேரி, ஹரிசன் மலையாள வியிடெட் (நீலகிரி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), குழித்துறை (கன்னியாகுமரி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), மைலாடி (கன்னியாகுமரி), நாகர்கோயில் (கன்னியாகுமரி), தலா 1 அளவு மழை பெய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+