சீன ஊடுருவலை தடுக்க முடியாத மோடி.. கச்சத்தீவு குறித்து பேச வந்துட்டாங்க! கனிமொழி அட்டாக்
கன்னியாகுமரி: சீன ஊடுருவலைத் தடுக்க மோடியால் முடியவில்லை என கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்தியை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை அருகே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

பரப்புரையில் கனிமொழி பேசியதாவது: தலைவர் கலைஞர் கலர் டிவி தருவோம் எனக் கூறினார் சொன்னதைச் செய்தார், விவசாயக் கடனை ரத்து செய்தார், மக்களுக்காக உழைக்கக்கூடிய மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு ஆட்சி நடத்தும் கட்சிகள் தான் இன்று இந்தியா கூட்டணியில் இணைந்திருக்கிறது.
நாம் மக்களைச் சந்தித்து வாக்குகள் கேட்கும் போது, நாம் திட்டங்கள், வாக்குறுதிகள் சொல்லி வாக்கு கேட்போம், ஆனால் பாஜக என்ன சொல்லி வாக்கு கேட்பார்கள். அதானி, அம்பானி, கார்ப்பரேட் நிறுவனத்திற்காக ஆட்சி நடத்தும் கட்சி தான் பாஜக. தேர்தல் பத்திரங்கள் என்பது சட்டம் பூர்வமாக ஊழலைச் செய்யக்கூடிய ஒரு வழி அதை சுப்ரீம் கோர்ட் நம்முடைய அரசியல் சாசனத்திற்கு எதிரான ஒன்று எனக் கூறிய நிலையில் பாஜக மிகப்பெரிய மோசடி செய்துள்ளது.
சீன ஊடுருவலைத் தடுக்க மோடியால் முடியவில்லை. இமாச்சல் மாநிலத்தில் பல கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்தியாவின் நிலப்பரப்பை ஆக்கிரமித்தது சீனா, இப்பொழுது அருணாச்சலப் பிரதேசத்தில் 97 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட 30 கிராமங்களை ஆக்கிரமிப்பு செய்து அதன் பெயரைச் சீனா மொழியில் மாற்றி உள்ளது.
அனைவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவதாகக் கூறி, இதுவரை செய்துள்ளனர், ஒன்றுமே செய்யவில்லை, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தேர்தலுக்காக அதை எல்லாம் சொல்லுவோம் சொன்னதை எல்லாம் செய்ய முடியுமா எனக் கூறியிருந்தார். பிரதமர் மோடி 300, 400 தொகுதிகளில் வெற்றி எனச் சொல்லலாம், அவர் கூறுவதெல்லாம் நடக்கவா போகிறது, அவர் எவ்வளவு பெரிய ஊழல் வாதிகள் என்று மக்களுக்குத் தெரிந்து விட்டது.

சட்டப்பூர்வமாகப் பல்லாயிரம் கோடி மதிப்பீட்டில் ஊழல் செய்ய முடியும் என பாஜக காட்டியுள்ளது, தேர்தல் பத்திரம் விவகாரம் இமாச்சல் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம் ஆகியவற்றில் சீனாவின் ஆக்கிரமிப்பு நாம் எடுத்துரைத்துப் பேசி வருவதால், கச்சத்தீவு விவகாரத்தை தற்போது பாஜக எழுப்பி உள்ளது. பத்து ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த இவர்கள் கச்சத்தீவை மீட்டெடுத்து இருக்கலாம் அல்லவா.
நாகூர் பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் நமது மேயரும் மாவட்ட செயலாளருமான மகேஷ், பொறுப்பேற்றதற்குப் பின்பு மேம்படுத்தப்பட்டது, இப்பகுதியில் குடிநீர் தேவைக்குப் பூர்த்தி செய்வதற்காகக் கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
நாம் ஒன்றியத்தில் ஆட்சி மாற்றத்தை அமைத்தவுடன், சமையல் எரிவாயுவின் விலை 500 ஆகக் குறைக்கப்படும், பெட்ரோல் விலை 75 ஆகவும், டீசல் விலை 65 ஆகவும் குறைக்கப்படும், நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகள் முற்றிலும் அகற்றப்படும் என தெரிவித்தார். வரும் தேர்தலில் நமது வேட்பாளர் விஜய் வசந்துக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications